
கோட்டக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகளுக்காக கோட்டக்குப்பம் மின்சார வாரியம் மின் தடை செய்கிறது. இந்நிலையில் அறிவிக்கப்படாத மின் தடையை பகல் நேரத்திலும், இரவு நேரத்திலும் மின் வாரியம் செயல்படுத்துகிறது.
பெரும்பாலும் இரவு நேரங்களில் மின் தடை ஏற்படுவதால் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெரியவர்கள் வரை மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
முன் அறிவிப்பு இல்லாத தொடர் மின் தடை நிகழாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சார வாரிய உயர் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ஆகியோர் சார்பில் கோரிக்கை வைக்கிறோம்.