கோட்டகுப்பத்தின் பெயரில் எப்போதுமே குழப்பம் நீடித்து வருகிறது. கோட்டைக்குப்பம், கோட்டகுப்பம், கோட்டக்குப்பம் என்ற பல வகையில் நமதூர் பெயர் கடை முகவரிகள், கடித முகவரிகளில் எழுதப்படுகிறது.
ஆனால், அரசு நிறுவனங்களின் இணையதளங்கள், வங்கி மற்றும் தனியார் சேவை இணையதளங்களில் “KOTTAKUPPAM” என்று குறிப்பிடப்பட்டு உள்ளதை பார்த்திருப்போம்.
இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமையும் வகையில் மாற்றி அமையக்கப்பட்டுள்ளது. உதாரணமாக கோயம்பத்தூர் தற்போது ஆங்கிலத்தில் “COIMBATORE” என்று உள்ளதை இனி “KOYAMPUTHTHOOR” என மாற்றப்பட்டு உள்ளது.
தற்போது மாற்றப்பட்டுள்ள பெயர்களை பொருத்தவரை (த், தி, த, தா, தெ, தே) என்ற எழுத்துக்களை உள்ளடிக்கிய ஊரின் ஆங்கில பெயர்களில் D, T என்பதற்கு பதில் Th என்று மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி பார்த்தால் “கோட்டக்குப்பம்” உச்சரிப்பின் அடிப்படையில் “KOTTAKKUPPAM” என்ற மாற்றி இருக்க வேண்டும். ஆனால் மாற்றவில்லை. இனி நாமும் நமதூர் பெயரை தமிழில் “கோட்டக்குப்பம்” (க் சேர்த்து எழுதவும்) ஆங்கிலத்தில் (இரண்டு k போட்டு) எழுத பழகுவோம்.