வாட்ஸ் அப்பில் புகார்:


24 நேரத்தில் பேரூராட்சி நடவடிக்கை

யாரும் உடனே ஷாக் ஆக வேண்டாம். கோட்டகுப்பதில் இல்லை, இது வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் நடப்பது.

செய்திக்கு செல்வோம் …

ஊரடங்கு காலத்தில் வாட்ஸ் அப் மூலம் பொது மக்கள் குறைகளைக் கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அமைந்துள்ள வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி செயல் அலுவலராகக் குகன் என்பவர் பணியாற்றி வருகிறார்.இவர் பணியேற்ற நாள் முதல் பேரூராட்சி மக்களின் நலனுக்காக பல்வேறுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அந்த வரிசையில் ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் அனைத்து பணிகளையும் சமூக வலைத்தளம் மூலமாகப் பொதுமக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாகப் பேரூராட்சிக்கு எனத் தனி ஃபேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தன.

ஊரடங்கின் போது பொதுமக்கள் தங்களது புகார்களைத் தெரிவிக்கத் தற்போது புதிய முயற்சியாக ஹலோ பேரூராட்சி என்ற வாட்ஸ் அப் எண்ணைப் பேரூராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் படி பேரூராட்சிக்கு உட்பட்ட மக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைபாடுகளை வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கும் பட்சத்தில் அந்தப் புகார் மீது 2 முதல் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்து உரியத் தீர்வு காணப்படும் என்றும் புகார் நடவடிக்கைக்கான நேரம் அதிகமாகும் எனில் அப்பணிக்கான காலம் நிர்ணயம் செய்து தீர்வு காணப்படும் எனவும் பேரூராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி திட்டம் அமல்படுத்தப்பட்ட 2 நாட்களில் 40 புகார்கள் பெறப்பட்டு அனைத்திற்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது. புகார் குறித்து புகைப்படத்துடன் பதிவிட்டால், தீர்வு காணப்பட்ட இடத்தின் புகைப்படம் மற்றும் சீரமைத்த பணியாளர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படுகிறது.இதனால் பேரூராட்சி பணியாளர்கள் உற்சாகமாக பணியாற்றி வருகின்றனர்.

கோட்டக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் நமதூருக்கு இதே போல் வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்கும் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

கோட்டக்குப்பம் பொதுமக்கள் அதுவரை கீழே இருக்கும் தமிழக அரசின் பேரூராட்சி தலைமை அலுவலகத்தின் ஆன்லைன் புகார் வசதியை பயன் படுத்திக்கொள்வோம் ….

https://etownpanchayat.com/PublicServices/Grievances/RegisterComplaints.aspx#!

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s