
ஊரடங்கு என்பது விடுமுறை காலம் அல்ல. சுகாதார பேரிடர் காலம். நோய் தோற்று குறித்த அச்சமும், பதட்டமும் நிறைந்திருக்கும் சமூக சூழல்.
இந்த நேரத்தில் கோட்டக்குப்பம் மற்றும் புதுவை பகுதி பள்ளிகளில் கட்டண கொள்ளையில் இறங்கியுள்ளனர்.
தனியார் கல்வி நிறுவனங்கள் தினசரி ஆன் லைன் மூலம் வகுப்புகள் நடத்தி குறைந்தது 6 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரைக்கும் கட்டணத்தை வசூலித்துவிட்டன. இத்தகைய சிக்கலில் தவித்து வரும் பெரும்பாலான பெற்றோரின் கவனம் முழுவதும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? குழந்தைகளை எப்படி பள்ளிக்கு அனுப்புவது? என ‘விழி பிதுங்கி’ நிற்கிறார்கள். இந்தப் பேரிடர் காலத்திலும் ‘கட்டணமே கொள்ளை’ என்று குறுஞ் செய்திகள் மூலம் கட்டணத்தை வசூலித்து வருகின்றன.
இதில் கொடுமை என்னவென்றால் மழலையர் பள்ளியும் பணம் கட்ட சொல்லி பெற்றோருக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்.
இந்த சின்ன பிள்ளைகளுக்கு ஆன்லைன் வகுப்பு கூட நடத்தாமல் எதற்காக பணம் கட்ட சொல்கிறார்கள் என புரியவில்லை. குறைந்த பட்சம் இந்த பேரிடர் காலத்தில் 50 சதவீதம் பணம் கட்ட சொன்னால் கூட கட்ட தயங்கும் நேரத்தில், இவர்கள் இரண்டு மாதமாக வகுப்பு நடத்தாமல் முழு கட்டணம் கட்ட சொல்லி குறுந்தகவல் அனுப்பி தள்ளுகிறார்கள்.
ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பதாக இருந்தாலும் குறைந்தபட்சம் 50 சதவீதம் கட்டணம் வாங்கலாம், ஆனால் இவர்கள் இதில் ஒரு பைசா கூட குறைத்து வாங்க தயார் இல்லை.
தனியார் பள்ளிகளின் இந்த அடாவடித் தனத்தை அரசு அதிகாரிகளுக்கும், தகவல் கொடுத்தால் குழந்தைகளின் எதிர்காலம் பாதித்துவிடும் என்று அஞ்சும் பெற்றோர்கள் பலரும் புகார் கொடுக்க தயக்கம் காட்டி வருகிறார்கள்.
புதுவையை தவிர்த்து கோட்டக்குப்பம் மக்களுக்காக பள்ளிநடத்தும் தனியார் முதலாளிகலாவது, நியாயமான குறைந்த பட்சம் கட்டணம் வாங்கி கஷ்டப்படும் மக்களுக்கு உதவ வேண்டும்…