

கோட்டகுப்பதை ஒட்டிய புதுச்சேரி மாநில முத்தியால்பேட்டை தொகுதியை சேர்ந்த
பலர் கொரோனா தொற்றால்
பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதனால் முத்தியால்பேட்டை சில பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கோட்டகுப்பதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.
கோட்டக்குப்பம் மக்கள் தங்கள் அன்றாட தேவையான காய்கறி, மளிகை போன்ற பொருட்களை முத்தியால்பேட்டையில் தான் வாங்குவார்கள்.
அப்படி வாங்க போகும் கோட்டக்குப்பம் மக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் கொரோனா எனும் கொடிய நோய் தொற்று பரவாமல் காத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கோட்டக்குப்பம் காவல் துறை மற்றும் பேரூராட்சி அலுவலம் முத்தியால்பேட்டையில் இருந்து வரும் மக்களை சோதித்து கோட்டக்குப்பம் பகுதிக்குள் விட வேண்டும்.