எல்லை மீறும் விமர்சனங்கள்… யார் இந்த தலைமை காஜி சலாஹூத்தீன் அய்யூப்?


தமிழகத்தில் ரமலான், நோன்பு பெருநாள், ஹஜ் பெருநாள் பிறை முடிவுகள் காஜியால் தான் எடுக்கப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு பெருநாள் நேரத்தின் போதும் இவரது அறிவிப்புகள் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்படுகிறது. தலைமை காஜி தரப்பிலும், ஜமாத்துல் உலமா சபை தரப்பிலும் நபி வழிகாட்டிய முறையில் தான் பிறை அறிவிப்பு வெளியிடுவதாக தெரிவிக்கின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்தையும் வைத்து தலைமை காஜியை எல்லை மீறி விமர்சிக்கும் போக்கு நடக்கிறது.

எது எப்படி இருந்தாலும் தலைமை காஜியின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் பெரும்பாலும் எல்லை மீறிச் செல்வதை காண முடிகிறது. அவரது வயதையும் அவரது மார்க்க அறிவையும் பொருட்படுத்தாமல் மிகக் கேவலமாக பேசி வருவதை ஏற்க முடியாது.

அரபு நாட்டில் இருந்து சுமார் 700 வருடங்களுக்கு முன்பு இந்தியா வந்த அரபு வம்சாவளியினரின் குடும்பத்தினர் இவர்கள் நவாயத் என்று அழைக்கப் படுகின்றனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குடியேறிய இவர்கள் 1700 களில் தமிழகத்தின் ஆற்காடு பகுதியிலும் பிறகு சென்னை பகுதிகளில் குடியேறினர். மார்க்க அறிஞர்கள் நிரம்பிய இவர்களின் குடும்பம் காஜி என்ற பெயராலேயே அழைக்கப்பட்டது.

இவரது மூதாதையர்கள் பல மார்க்க விளக்க நூல்களை எழுதியவர்கள். குர்ஆனுக்கு உருது மொழியில் மொழி பெயர்ப்பு, தப்சீர் எனும் விளக்கவுரை என மார்க்கத்துக்கு அளவற்ற சேவைகள் புரிந்த இவர்களது குடும்பத்தை சார்ந்த அறிஞர்கள் ஆற்காடு நவாபுகளால் அரசு காஜியாக நியமிக்கப்பட்டனர். (அந்த காலத்து உச்ச நீதிமன்ற நீதிபதி போல்). அன்றைய தமிழகத்தை ஆற்காடு நவாபுகளே ஆண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காஜி சலாஹூத்தீன் அய்யூப் இந்த குடும்பத்த பிறந்தவர். உலகப் புகழ் பெற்ற எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர். M.A., M.Phil படித்துவிட்டு ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் Phd பெற்றவர். நவாபுகள் காலத்தில் 1800 களில் ராயப்பேட்டை திவான் தோட்டத்தில் மதரஸா முஹம்மதியா என்ற பெயரில் பள்ளிவாசலுடன் இணைந்த மார்க்க கூடத்தை இவர்களது முன்னோர்கள் நடத்தி வந்துள்ளனர். அதுவே தற்போதைய தலைமை காஜியின் அலுவலகமாகவும், இருப்பிடமாகவும் உள்ளது.

இங்கு அரிய வகை நூல்களை கொண்ட நூற்றாண்டுகளை கடந்த ஒரு நூலகம் இயங்கி வருகிறது. சென்னையின் பழமையான நூலகம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். உருது, பார்சி, அரபி மொழிகளின் பழமையான மேனுஸ்கிரிப்ட் என்று சொல்லப்படும் குர்ஆன், மார்க்க, வரலாற்று நூல்களை தேடி உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் இங்கு வருகின்றனர்.
தலைமை காஜி அவர்களை நன்கறிந்தவர்கள் கூறும் வகையில், அவர் மிகவும் எளிமையானவர் என்றும் மக்களால் எளிதில் அணுகப்படக்கூடியவர் என்கிறார்கள். யாருடைய எந்த நிர்பந்தத்திற்கும் அடி பணியாதவர் என்கிறார்கள். அரசு வழங்கிய சைரன் வைத்த கார், அரசு ஒதுக்கிய வீடு, அரசு வழங்கும் ஊதியம், அரசு வழங்கிய தலைமை அலுவலகம் என தனது பொறுப்புக்காக அரசு வழங்கும் எதையும் பெறாதவர் தலைமை காஜி.

பதிவு: மன்பயீ ஆலிம்

குறிப்பு: தலைமைக் காஜியின் நிலைபாட்டை நியாயப்படுத்துவதோ அல்லது விமர்சிப்பதோ #கோட்டக்குப்பம்_நியூஸின் நோக்கம் அல்ல. ஆனால், அவரை பற்றி எதுவும் அறியாமல் பலர் விமர்சித்து வருகின்றனர். எனவே அவர் குறித்த தகவலை பகிர்கிறோம்.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s