
ஊரடங்கு முடியும் வரை விமான டிக்கெட் முன்பதிவு இல்லை: ஏர் இந்தியா அறிவிப்பு
இந்தியாவில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டிருந்த நாடுதழுவிய 4- ம் கட்ட ஊரடங்கு மே 31ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
மேலும் மே 31ஆம் தேதி வரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள், மெட்ரோ ரயில் சேவை என எதுவும் இயங்காது எனவும் அறிவித்துள்ளது.இந்நிலையில் அனைத்து ஏர் இந்தியா விமானங்களில் தற்போதைக்கு டிக்கெட் முன்பதிவு இல்லை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்ட பிறகே விமான சேவை தொடங்கும் என்று ஏர் இந்தியா விளக்கமளித்துள்ளது.
உள்நாட்டு விமான போக்குவரத்தை மே 31ம் தேதி வரை துவக்கப் போவதில்லை’ என ‘ஏர் இந்தியா’ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் சிறப்பு வந்தே பாரத் விமான சேவை மற்றும் சரக்கு விமான சேவைக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.