
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தொழிலாளர் அமைச்சகம் 1990 மற்றும் 2020 வருடத்திற்க்கு இடையில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு 4,000 திர்ஹம்ஸ் பணம் வழங்குவதாக வாட்ஸ் அப் செய்தி ஒன்று பரவி வருகின்றது.
இது குறித்து மறுப்பு தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ள சம்மந்தபட்ட அமைச்சகம் இது ஒரு மோசடி என்றும் உங்களுக்கு இந்த செய்தி கிடைத்தால் எச்சரிக்கையாக இருங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இதே போன்று இந்தியாவிலும் அங்குள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திலிருந்து 120,000 ரூபாய் வழங்கபடும் என மக்களுக்கு வாக்குறுதி அளிக்கபட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் மூலமாக பரப்பபட்டு வந்த செய்தியை இந்திய அரசு மறுத்துவிட்டது குறிப்பிடதக்கது.
இது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழிலாளர் அமைச்சகம் பெயரில் பதியபட்டுள்ள labour.rebajaslive.com எனும் போலியான இணையதளத்தில் வெளியிடபட்டுள்ள பட்டியலில் பயனாளர்கள் தங்களின் பெயர் இருக்கிறதா என்று சரி பார்க்க அந்த லிங்கை க்ளிக் செய்யுமாறு கூறுகிறது. அதிலிருந்து வலைதளத்திற்க்கு செல்லும் லிங்கானது மூன்று எளிய கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என தொடங்கி ஒவ்வொன்றாக நீளும் இந்த மோசடி இருதியாக 20 நபர்களுக்கு ஷேர் செய்ய வேண்டும் என முடிகிறது.
பொதுமக்கள் யாரும் இந்த மோசடி விளம்பரத்திற்க்கு பதில் அளிக்க வேண்டாம் எனவும் இது போன்ற ஆன்லைன் மோசடிகளை விட்டு எச்சரிக்கையாக இருக்குமாறும் அமீரக காவல்துறை சார்பாக ஏற்கனவே பொதுமக்களுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது.
இது போன்ற ஆன்லைன் மோசடிகளில் இடுபடும் நபர்கள் பிடிபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கவும் அரபு அமீரக அமைச்சகம் உத்தவிட்டுள்ளது குறிப்பிடதக்கது.