
• ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டம் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.
• சிறு, குறு தொழில்துறைக்கு ரூ.3 லட்சம் கோடி கடனுதவி,
• சிறு, குறு தொழில்துறைக்கு இன்று 6 சலுகை அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன- நிர்மலா சீதாராமன்.
• பல்வேறு தரப்பினரும் கலந்து ஆலோசித்து இந்த சிறப்பு பொருளாதார தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
• தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் – நிதியமைச்சர்.
• வளர்ச்சியை ஏற்படுத்தவும், தன்னிறவை உருவாக்கவும் இந்த சுயசார்ப்பு பாரத திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
• திட்டத்தின் 5 முக்கிய தூண்கள் – பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழிநுட்பம், மக்கள் சக்தி, தேவைகள்.
• நேரடியாக பணம் செலுத்தும் அரசின் திட்டம் மூலம் ஏழைகள் பயன்பெற்று வருகிறார்கள்.
• மின்துறை சீர்த்திருத்தங்கள் நாட்டை மின்மிகை நாடாக உருவாக்கியுள்ளது – மத்திய நிதியமைச்சர் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்.
• லாக்டவுனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டுவிட்டது- நிர்மலா சீதாராமன்.
• உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.
• தூய்மை இந்தியா, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு, இலவச கேஸ் சிலிண்டர் போன்றவை இந்த காலத்தில் கைகொடுத்துள்ளன.
• பிரதான் மந்திரி கிசான் திட்டம், நேரடியாக ஏழைகளுக்கு பணம் செலுத்துதல் போன்றவை முழு முடக்க காலத்தில் மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது.
• எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறியுள்ளது- நிர்மலா சீதாராமன்.
• உலகம் முழுவதற்கும் இன்று இந்தியா தான் மருந்துகளை கொடுத்து உதவுகிறது – நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர்.
• 41 கோடி பயனாளிகளுக்கு ரூ.52,000 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகள் நேரிடையாக வழங்கப்பட்டுள்ளன.
• 6.5 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 71,000 டன் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது-மத்திய நிதியமைச்சர்.