இந்தியாவில் பிறக்க போகும் குழந்தைகள்..? யூனிசெஃப் அமைப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது..!


இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 2 கோடி குழந்தைகள் பிறக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், யூனிசெஃப் அமைப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் நோய் ஒரு தொற்று நோயாக அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் 11 முதல் டிசம்பர் 16ஆம் தேதிக்குள் இந்தப் பிறப்பு எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் முடங்கிக் கிடக்கும் நிலையில், கர்ப்பிணிகள் பிறக்கும் குழந்தைகளின் உடல்நலம் குறித்து ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யூனிசெஃப் கவலை தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் பெரும்பாலான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் முழு கவனமும் இருப்பது இதற்கு ஒரு காரணமாகும்.

மேலும், மருத்துவமனைகளில் உள்ள உபகரணங்களும் கொரோனா நோயாளிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதால், கர்ப்பிணிகள் மற்றும் பிறக்கும் குழந்தைகளுக்கான மருத்துவ உபகரணங்களின் அவசியம் கேள்விக்குறியாக உள்ளது.

குறிப்பாக, பிறக்கும் குழந்தைகளுக்கு கொரோனா தாக்கம் ஏற்பட்டுவிடக் கூடாது. இவ்விஷயத்தில் தாய்மார்கள் வெகு எச்சர்க்கையாக இருக்க வேண்டும்.

இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த & வசதியான நாடுகளில் கூட இந்தப் பிரச்சனைகள் உள்ளன.

வரும் 10ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடவுள்ள நிலையில், புதிதாகப் பிறக்கும் 20 கோடி இந்தியக் குழந்தைகளின் தாய்மார்கள் முழு கவனத்துடன் தங்கள் குழந்தைகளைப் பராமரிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது யூனிசெஃப்.

அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அனைத்து நாடுகளுக்கும் அது வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த மார்ச் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், உலகிலேயே இந்தியாவில்தான் அதிக அளவு குழந்தைகள் பிறக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 9 மாதங்களில்

சீனாவில் 1.35 கோடி குழந்தைகளும், நைஜீரியாவில் 64 லட்சம் குழந்தைகளும், பாகிஸ்தானில் 50 லட்சம் குழந்தைகளும், இந்தோனேசியாவில் 40 லட்சம் குழந்தைகளும் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s