1. கோட்டகுப்பம் முத்தியால்பேட்டை எல்லை அடைப்பு ஒரு பிராந்தி கடைக்காரங்க கடையை திறக்க புதுவை அரசு கிழக்கு கடற்கரை சாலையை மறித்து உள்ளது உடனடியாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் உடனடியாக தமிழக முதல்வர் தலையிட வேண்டும் மறைந்த மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்கள் புதுச்சேரிக்கு செல்லும் மணல் லாரிகளை தடுத்து நிறுத்தினார்கள் புதுச்சேரி செல்லும் பீர் பிராந்தி கள்ளத்தனமாக செல்லும் லாரிகளை தடுத்தார்கள் அவர்கள் தடுத்து நிறுத்தினார்கள் அதுபோன்று எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் புதுவைக்கு செல்லும் மணல் லாரிகளை தடுத்து நிறுத்த வேண்டும் மூன்று பக்கம் பாண்டிச்சேரி யாளும் ஒரு பக்கம் வங்ககடலால் சூழப்பட்ட பகுதி தான் கோட்டகுப்பம் பேரூராட்சி எங்கள் ஊரை காப்பாற்ற தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எங்களுக்கு மருத்துவ வசதி இல்லை மருத்துவமனைகள் இல்லை மருந்து கடைகள் இல்லை எங்கள் ஊரில் உயிரிழப்பு நேர்ந்தால் விளைவு விபரீதம் ஆகிவிடும் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் முக்கியமாக எங்கள் ஊரில் கொரானா இல்லை
2. மாண்புமிகு முதல்வர் நாராயணசாமி அவர்களுக்கு வணக்கம் புதுவை ஒட்டியுள்ள கோட்டகுப்பம் பகுதி பிரெஞ்சுக்காரர் ஆட்சியின்போது எங்களை தடுக்க வில்லை ஆனால் இப்பொழுது கோட்டகுப்பம் பகுதியை இரும்புக்தகரம் கொண்டு காம்பவுண்ட் அமைக்கிறார்கள் கிழக்கு கடற்கரை சாலையை அடைக்கும் அதிகாரம் உங்களுக்கு எப்படி வந்தது இதுநாள்வரை பிரெஞ்சுக்காரர் காலத்திலிருந்து பாண்டிச்சேரியை நம்பியே நாங்கள் வாழ்ந்து விட்டோம் ஒரு மருந்து வாங்க எங்கு செல்வோம் கிழக்கு கடற்கரை சாலை நாங்களும் அடைத்தாள் உங்கள் காலாப்பட்டு பிள்ளைச்சாவடி கனகசெட்டிகுலம் எப்படி செல்வீர்கள் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளுங்கள் கோட்டக்குப்பத்தை தாண்டி தான் நீங்கள் காலாப்பட்டு செல்ல வேண்டும் திரும்பவும் புதுச்சேரிக்கு வரவேண்டும்மென்றால் கோட்டகுப்பத்தை தாண்டிதான் புதுச்சேரிக்கு செல்ல வேண்டும் நீங்கள் செய்யும் வேலையால் தமிழக மக்கள் கொந்தளித்தால் புதுவைக்கு வரும் காய்கறி எந்த வழியாக வரும் புதுவைக்கு வரும் பெட்ரோல் டீசல் லாரிகள் எந்த வழியாக வரும் புதுவைக்கு ஒரு மருத்துவ பொருட்கள் எந்த வழியாக வரும் யோசனை செய்து பாருங்கள் அனைத்து வாகனங்களும் நாங்கள் தடுக்க நினைத்தால் புதுச்சேரி பகுதி என்னவாகும் கோட்டக்குப்பத்து மக்களை வன்முறைக்கு தூண்டும் செயலை கைவிடுங்கள் உடனடியாக தமிழக முதல்வர் அவர்கள் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் தமிழக அமைச்சர்கள் ஒரு வழி வகை செய்ய வேண்டும் ஆரம்பக்கட்டத்திலேயே இந்த பிரச்சனை தீர்ப்பது நல்லது பிறகு சட்டம் ஒழுங்கு கெடும் நிலை ஏற்பட்டால் யார் பொறுப்பு
