மகப்பேறுகால நிதி உதவித்திட்டம்… பெறுவதற்கான ஏ டு இசட் வழிமுறைகள்!


பெண்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்குகிறது. அவற்றை அறிந்துகொண்டு குறித்து நேரத்தில் பெற்று பயன்பெறலாம். அத்தகைய நலத்திட்டங்களில் ஒன்று, கர்ப்பிணிப் பெண்களின் உடல் ஆரோக்கியத்துக்கும் கர்ப்பத்தில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக வளரவும் உதவும் ஆரோக்கியமான உணவு மற்றும் பிற அத்தியாவசியமான தேவைகளுக்காகவும் வழங்கப்படும், ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை’. இதைப் பெறுவதற்கு தேவையான சில அடிப்படைத் தகவல்களைப் பார்ப்போமா?

விண்ணப்பம்:

கர்ப்பம் தரித்ததும் உங்கள் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கோ, அரசு மருத்துவமனைக்கோ சென்று, உங்கள் கர்ப்பத்தை உறுதிசெய்யவும். பிறகு, அங்குள்ள அரசு செவிலியரிடம், ‘முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம்’ விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்திசெய்தோ அல்லது அரசு சமூகநலத்துறை இணைய பக்கத்தில் இருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தோ இணைக்க வேண்டிய சான்றிதல்களை இணைத்து அரசு செவிலியரிடம் கொடுக்கலாம். அதன்பின்னரே, உதவித்தொகை பெறுவதற்கான தாய் – சேய் நலஅட்டை வழங்கப்படும்.

இணைக்க வேண்டியவை:

கர்ப்பிணியின் சமீபகால பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு.

குடும்ப அட்டையின் நகல்.

கருவுற்ற பெண்ணின் ஆதார் அட்டை நகல்.

வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பதற்கான வருமான சான்று.

தாய் சேய் நல அட்டையின் நகல்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் உங்கள் வங்கி கணக்குப் புத்தகத்தின் நகல்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

19 வயதுக்கு மேற்பட்ட கருவுற்ற பெண்.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்.

தமிழ்நாடு விவசாயத் தொழிளார்கள்.

வேலைக்கு செல்ல இயலாத ஆண்களின் மனைவிகள்.

நிலமற்ற ஏழைகள்.

பெண்ணைக் குடும்பத்தலைவியாக கொண்ட குடும்பங்கள்.

இலவச வீடுகள்,இயற்கை பாதிப்பால் வீடு இழந்தவ்ர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டில் வசிப்பவர்கள்,விண்ணப்பிக்கலாம்.

சொந்த வீடு இருந்தும் கூலி வேலைகள் செய்பவர்கள்.

உதவித்தொகை:

அரசு மூலம் கொடுக்கப்படும் இந்த உதவித்தொகை இரண்டு தவணைகளாக வழங்கப்படுகிறது.

கருவுற்ற ஏழாவது மாதத்தில், முதல் தவணையாக 9000 ரூபாய் வழங்கப்படுகிறது. இரண்டாவது தவணையாக 9000 ரூபாய், பிரசவத்துக்குப் பின்பு குழந்தைக்கு முத்தடுப்பு ஊசி செலுத்தியதும் கருவுற்ற பெண்ணின் வங்கிக் கணக்கில் அரசால் செலுத்தப்படுகிறது..

விதிமுறைகள்:

கருவுற்று இருப்பதை உறுதிசெய்ததும் அரசு மருத்துவமனையில் பதிவுசெய்து, தாய் சேய் நலஅட்டை பெற்றிருருக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் ஐந்து முறையாவது மருத்துவக் கவனிப்பு பெற்றிருக்க வேண்டும். இந்த மருத்துவ கவனிப்பில் கர்ப்பிணிகளின் இரத்தக்கொதிப்பு அளவு,உடலில் சுரக்கும் சரக்கரையின் அளவு,உடல் எடை,குழந்தையின் இதயத்துடிப்பின் எண்ணிக்கையின் அளவு போன்றவை கணக்கீடு செய்யப்பட்டு தாய் சேய் நல அட்டையில் குறிக்கப்படுகிறது.மேலும் அந்தப் பகுதியில் உள்ள பல்நோக்கு சுகாதாரப் பணியாளரால் பராமரிக்கப்படும், குடும்பநல பதிவேட்டிலும், பிரசவ கால முன்பதிவேட்டிலும் பதிவுசெய்திருக்க வேண்டும்.

குறிப்பு:

முதல் 2 குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டத்தில் உதவி பெறமுடியும்.

கருவுற்ற முதல் மாதத்திலே இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து உங்கள் பகுதியில் உள்ள அரசுத் செவிலியரிடம், தாய் சேய் நல அட்டை பெற்றிருக்க வேண்டும்.

தனியார் மருத்துவமனையில் குழந்தைப் பேறு நடப்பவர்களும், கருவுற்று இருப்பதைக் காலம் தாழ்த்தி பதிவுச் செய்பவர்களும் இத்திட்டத்தில் பயனடைய முடியாது.

மேலும் தகவல்களுக்கு, கீழே இருக்கும் தொலைபேசி எண்களை அழைக்கவும் 👇👇👇

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s