
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
பேரூராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் அண்மைக் காலமாக மாலை நேரத்தில் கொசு, பூச்சிகளின் தொல்லை அதிக அளவில் உள்ளது.
இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக குழந்தைகள், முதியோர் தூக்கமின்றி அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், பெருகிவரும் கொசுத் தொல்லையால், டெங்கு உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்கள் பரவுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
எனவே, அனைத்து வார்டுகளிலும் கொசு ஒழிப்பு மருந்தினை தெளிக்கவும், திறந்த நிலையில் உள்ள மழை நீர், கழிவு நீர் கால்வாய்கள் மீது மூடிகள் அமைக்கவும் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.