கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட குண்டு கிராமம் பகுதியில் ஏற்கனவே தனியார் நிறுவன செல்போன் டவர் உள்ளது. குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த செல்போன் டவரை அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், அதே பகுதியில் இன்னொரு டவர் அமைக்கும் பணிகள் நடந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் 100க்கும் மேற்பட்டோர், கோட்டகஙகுப்பம் பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கத்தை சந்தித்து செல்போன் டவர் அமைப்பதை தடுத்து நிறுத்தக் கோரி மனு அளித்தனர். இதையடுத்து, பேரூராட்சி செயல்அலுவலர், போலீசார் உதவியுடன் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அனுமதி பெறாமல் அங்கு செல்போன் டவர் அமைப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, செல்போன் டவர் அமைக்கும் பணியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.