பலத்த மழை: கோட்டக்குப்பம் அருகே கடல் சீற்றத்தால் வீடுகள் இடிந்தன
கடல் சீற்றத்தால் பாதிப்பு: வங்கக் கடலில் புயல் காற்று வீசக் கூடும் என்பதால், தமிழக, புதுவை கடலோரப் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி, விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாக, கடந்த இரு தினங்களாக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது .
பொம்மையார்பாளையம் பழைய மீனவர் குடியிருப்புப் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக, கடலரிப்பு ஏற்பட்டு, கரையோரம் இருந்த 3 பழைய வீடுகள் இடிந்து விழுந்தன. தென்னை மரங்களும் வேரோடு சாய்ந்து கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டன.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.