புதுச்சேரியில் பொழுது போக்குக்கு முக்கிய இடங்களுள் ஒன்று கடற்கரை. குறிப்பாகத் தலைமைச்செயலகம் அருகேயுள்ள கடற்கரை 1.5 கி.மீ. நீளமுடையது. இச்சாலையில் ஏராளமான நினைவுச்சின்னங்கள் உள்ளன. கடற்கரையையொட்டி உள்ள அழகான நடைபாதையில் கடலை ரசித்தபடி நடப்பது அவ்வளவு சுகம் தரும்.
இங்கே ஆயிரக்கணக்கில் வரும் சுற்றுலா பயணிகளால் பயன்படுத்தப்பட்டு பின்னர் வீசயெறிப்படும் பலவகையான பிளாஸ்டிக் பொருட்களும் கடலோரத்தில் குவியலாக பரவிக்கிடக்கிறது.
இதனை தூய்மைபடுத்தும் பணியில் வாக் ஃபார் பிளாஸ்டிக் குழுவுடன் கோட்டக்குப்பம் இளைஞர்கள் சேர்ந்து இன்று (24.11.2019) பாண்டிச்சேரி கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினர்.
மேலும் இனி புதுவை கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து, நகரை தூய்மையாக வைத்துக் கொள்ள பயணிகளும், உள்ளூர் வியாபாரிகளும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நீங்களும் இந்த நல்ல சேவையில் இனைய விருப்பம் இருந்தால் கீழ் காணும் தொலைபேசியை எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.
பிரிட்டோ. :. +91 99409 59464
சயீத். : 72001 28812
அக்பர் : +91 87547 97671
ஆஷிக் (ஹகீம்) :. 7904644654