டோல்கேட்டில் இனி சுங்கக் கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம்


சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்காமல் செல்ல ‘பாஸ்டேக்’ திட்டம் வருகிற டிசம்பர் மாதம் 1-ந்தேதி முதல் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

“சுங்க கட்டணங்கள் செலுத்த வரிசையில் வாகனங்கள் நிற்பதால் தாமதம் ஆகிறது. இந்தநிலையை தவிர்க்க பாஸ்டேக் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும் அது முழுமையாக செயல்படவில்லை. தற்போது பாஸ்டேக் திட்டம் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் 5 வழிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

வருகிற டிசம்பர் 1-ந்தேதி முதல் இந்த திட்டம் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் அமல்படுத்தப்படுகிறது.

இதன்படி ‘மை பாஸ்ட் டேக்’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து இது தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

சுங்கச்சாவடி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பெட்ரோல் பங்குகள், பொதுச் சேவை மையம் (காமன் சர்வீஸ் சென்டர்) ஆகியவற்றில் பாஸ்டேக் கார்டை பெறலாம். இந்த கார்டுகளை பெற ஆர்.சி.புத்தகம், இன்சூரன்ஸ், வாகன உரிமையாளர்களின் ஆதார் கார்டு ஆகியவற்றை காண்பிக்க வேண்டும். ஒவ்வொரு கார்டுதாரர்களுக்கும் தனி பயன்பாட்டு குறியீடு, ரகசிய குறியீட்டு எண்கள் வழங்கப்படும்.

வாகன உரிமையாளர்கள் தாங்கள் சுங்கச்சாவடிகளை எத்தனை முறை கடந்து செல்வார்களோ அதற்கு தகுந்தவாறு குறைந்தபட்சம் ரூ.150 முதல் அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் வரை கட்டணம் செலுத்தி இந்த கார்டை பெறலாம். கடந்து செல்வதற்கு தகுந்தவாறு கட்டணங்கள் கழித்துக்கொள்ளப்படும். அனைத்து தொகையும் தீர்ந்த பின்னர் மீண்டும் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்”

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s