

கோட்டகுப்பம் FIVE ஸ்டார் நற்பணி இயக்கத்தினரின் ஆதரவோடு கும்பகோணம் ஹலிமா டிரஸ்ட் வருடா வருடம் கோட்டகுப்பம் மற்றும் அதனை சுற்றி உள்ள ஊர்களின் உள்ள ஏழை மக்களுக்கு ஜக்காத் பொருட்களாக குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் தேவையான துணி மணிகள் வழங்கி வருகிறார்கள். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் (2020 வருட ரமலான் மாதத்திற்கு ) சுமார் 436 குடும்பங்களுக்கு ஜக்காத் பொருட்கள் வழங்க டோக்கன் வழங்கப்பட்டது. நோன்பு மாதத்தில் டோக்கன் பெற்ற அணைவருக்கும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு துணி வழங்கப்படும்.