கோட்டக்குப்பம் தங்கும் விடுதிகளுக்கு உரிமம் பெற காவல் துறை அறிவுறுத்தல்
தங்கும் விடுதிகளுக்கு முறையாக உரிமம் பெற வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தியது.
கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளின் உரிமையாளார்கள், மேலாளார்கள், பொறுப்பார்ளாகளுக்கான ஆசோனைக் கூட்டம் கோட்டக்குப்பத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் , கோட்டுக்குப்பம் டிஎஸ்பி அஜய் தங்கம், காவல் ஆய்வாளார் சரவணன் மற்றும் வருவாய்த் துறை, மின் துறை, தீயணைப்புத் துறை, உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனார் .
கூட்டத்தில் போலீஸார் கூறியதாவது: தங்கும் விதிகள், சொகுசு விடுதிகள் வருவாய்த் துறையிடம் உரிமம் பெற்று மட்டுமே இயங்க வேண்டும். இந்தப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட விடுதிகள் உள்ளபோதும், 20-க்கும் குறைவான விடுதிகள் மட்டுமே முறையாக உரிமம் பெற்று இயங்குகின்றன. உரிமம் இன்றி விடுதிகளை இயக்குவது சட்ட விரோதம். எனவே, வரும் டிச.15-ஆம் தேதிக்குள் அனைத்து தங்கும் விடுதிகளுக்கும் உரிய அனுமதி பெற வேண்டும். இல்லையெனில், அவற்றுக்கு சீல் வைக்கப்படும். வருவாய்த் துறையில் உரிமம் பெறும்போது காவல் துறை, தீயணைப்புத் துறை, மின்துறை போன்ற பல்வேறு துறையினரிடம் தடையில்லா சான்றுகளை பெற வேண்டும் என அறிவுறுத்தினார் .
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.