தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை. இதனால் குடிநீர், ரோடு உட்பட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணியில் தமிழக அரசு மும்முரமாக களம் இறங்கியுள்ளது.இதையொட்டி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் படி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை உத்தரவிட்டது. உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
வாக்காளர் பட்டியலில் இருக்கும் தங்கள் பெயர், முகவரி உள்ளிட்டவற்றை சரிபார்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.
பொதுமக்கள் உள்ளாட்சி மன்றங்களில் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என உறுதி செய்து கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைத் தேட
பார்க்க: http://elections.tn.gov.in/