அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவில் விண்ணப்பித்த 3.3 கோடி பேரில் 19 லட்சம் பேர் விலக்கப்பட்டிருக்கிற பின்னணியில், தேசிய மக்கள்தொகை பதிவு திட்டத்தை மீண்டும் கொண்டுவந்திருப்பது நாட்டில் குடியுரிமை என்ற கருத்து நிச்சயமற்ற தன்மையை அடைந்துள்ளது.
ஆதார் தொடர்பான தனியுரிமை பிரச்சினைகள் தொடர்பாக நாட்டில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்தியாவில் வசிப்பவர்கள் குறித்த விரிவான தரவுகளை சேகரிப்பதற்கான முயற்சியில் தேசிய மக்கள்தொகைப் பதிவு (என்.பி.ஆர்.) உள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த ஒரு தேசம், ஒரு அட்டை என்ற கருத்தை முன்வைத்து, தேசிய குடிமக்கள் பதிவு (என்.ஆர்.சி.) நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்று வலியுறுத்தியது இந்த உரையாடலில் சேர்ந்துள்ளது.
தேசிய மக்கள்தொகை பதிவு (என்.பி.ஆர்.) என்றால் என்ன?
தேசிய மக்கள்தொகை பதிவு என்பது நாட்டின் வழக்கமான குடியிருப்பாளர்களின் பட்டியல். உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, நாட்டின் வழக்கமான குடியிருப்பாளர் என்பவர் குறைந்தது கடந்த ஆறு மாதங்களாக ஒரு உள்ளூர் பகுதியில் வசித்து வருபவர் அல்லது அடுத்த ஆறு மாதங்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்க விரும்புபவர். இது தேசிய குடிமக்கள் பதிவு போல இல்லை. தேசிய மக்கள்தொகை பதிவு குடியுரிமை கணக்கீடு செய்வது அல்ல. ஏனெனில், இது ஒரு வெளிநாட்டவர்கூட ஆறு மாதங்களுக்கும் மேலாக ஒரு வட்டாரத்தில் தங்கியிருப்பதை பதிவு செய்யும்.
இந்த தேசிய மக்கள்தொகை பதிவு (என்.பி.ஆர்.) குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் (குடிமக்களை பதிவு செய்தல் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை வெளியிடுதல்) 2003, ஆகியவற்றின் கீழ் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் வசிப்பவர்கள் தேசிய மக்கள் தொகை பதிவில் (என்.பி.ஆர்.) பதிவு செய்வது கட்டாயமாகும்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு முதல் கட்டம் வீடுகள் பட்டியலுடன் இணைந்து 2021 ஆம் ஆண்டுக்காண மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய தலைமை பாதிவாளர் அலுவலகத்தால் (ஆர்.ஜி.ஐ) நடத்தப்படும். சமீபத்தில் தேசிய குடிமக்கள் பதிவு கணக்கெடுப்பை அளித்துள்ளதால் அஸ்ஸாம் மட்டும் சேர்க்கபடவில்லை.
என்.பி.ஆர் பயிற்சி உள்ளூர், வட்டாரம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் நடத்தப்பட்டுள்ளது. ஆர்.ஜி.ஐ ஏற்கனவே 1,200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 40 நகரங்கள் மற்றும் மாநகரங்கள், 5,218 கணக்கீட்டு தொகுதிகள் மூலம் ஒரு சோதனை திட்டத்தை தொடங்கியுள்ளது. அங்கு மக்களிடமிருந்து பல்வேறு தரவுகளை சேகரித்து வருகிறது. இறுதி கணக்கீடு ஏப்ரல் 2020 இல் தொடங்கி 2020 செப்டம்பரில் முடிவடையும்.
இதைச்சுற்றியுள்ள சர்ச்சை என்ன?
அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவு 19 லட்சம் மக்களை நீக்கியதன் பின்னணியில், இது வருகிறது. நாடு முழுவதும் என்.ஆர்.சி செயல்படுத்தப்படும் என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ள நிலையில், என்.ஆர்.பி என்.பி.ஆர் நாட்டில் குடியுரிமை என்ற என்ற கருத்தையொட்டி கவலைகளை எழுப்பியுள்ளது. ஆதார் மற்றும் தனியுரிமை குறித்து ஒரு விவாதம் தொடர்ந்தாலும், இந்தியாவில் வசிப்பவர்கள் குறித்து மிகப் பெரிய அளவிலான தனிப்பட்ட தரவை சேகரிக்க என்.பி.ஆர் விரும்புகிறது.
நாடு தழுவிய அளவில் என்.ஆர்.சி நடத்தும் இந்த கருத்து வரவிருக்கும் என்.பி.ஆர் இன் அடிப்படையில் மட்டுமே நடக்கிறது. குடியிருப்பாளர்களின் பட்டியல் உருவாக்கப்பட்ட பிறகு, நாடு தழுவிய அளவில் என்.ஆர்.சி அந்த பட்டியலிலிருந்து குடிமக்களை சரிபார்க்கும்.
ஆதார், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் போல பல அடையாளத் தரவுத்தளங்களில் என்.பி.ஆர். இருக்கிறது. அவற்றை ஒரே அட்டையில் ஒரே அட்டையில் இணைத்துப் பார்க்க விரும்புவதாக அமித்ஷா கூறினார். செவ்வாய்க்கிழமை புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் மற்றும் இந்திய தலைமை பதிவாளர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழாவில், “நாம் இந்த எல்லா தனியான நடைமுறைகளையும் முடிவுக்குகொண்டுவருவோம்” என்று கூறினார். “நாம் டிஜிட்டல் கணக்கெடுப்பு செய்தால் எல்லா ஆட்டைகலும் ஒரே அட்டைக்குள் வரும். அரசாங்கம் இன்னும் இந்த திட்டத்தை உருவாக்கவில்லை. ஆனால், அரசாங்கம் இந்த திட்டத்தை இன்னும் உருவாக்கவில்லை. ஆனால், ஒரு வெற்றிகரமான டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்கிற உங்களுடைய பணி மற்றும் இது பொதுமக்களின் நலனுக்காக என்பதைக் காண்பிப்பதற்கான திறனை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்”என்று அமித்ஷா கூறினார்.
தேசிய மக்கள் தொகை பதிவு (என்.பி.ஆர்) என்பது புதிய யோசனையா?
இல்லை. இந்த யோசனை உண்மையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யு.பி.ஏ) ஆட்சிக்கு முந்தையது. 2009 ஆம் ஆண்டில் அப்போதைய உள்துறை அமைச்சர் பி.சிதம்பரத்தால் இயக்கப்பட்டது. உண்மையில், அந்த நேரத்தில் அது ஆதார் (யு.ஐ.டி.ஏ.ஐ) உடன் மோதியது. இது அரசாங்க நலத்திட்டங்களை குடிமக்களுக்கு அளிப்பதற்கு இந்த திட்டம் மிகவும் பொருத்தமானது என்றது. உள்துறை அமைச்சகம் இதனை ஒரு சிறந்த வாகனம் என்று முன்வைத்தது. ஏனென்றால், இது ஒவ்வொரு என்.பி.ஆர் பதிவு செய்யப்பட்ட குடியிருப்பாளர்களையும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் ஒரு வீட்டிற்குள் இணைத்தது. அதன்பிறகு, உள்துறை அமைச்சக உந்துதல் யு.ஐ.டி.ஏ.ஐ திட்டத்தையும்கூட தள்ளிப்போட்டுவிட்டது.
2011 கணக்கெடுப்பில் வீட்டுப் பட்டியலுடன் என்.பி.ஆர்-க்கான தரவு முதன்முதலில் 2010-இல் சேகரிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் இந்த தரவு வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் மேலும் புதுப்பிக்கப்பட்டது.
இருப்பினும், தற்போதைய அரசாங்கம் 2016 ஆம் ஆண்டில் அரசாங்க சலுகைகளை வழங்குவதற்கு முக்கிய வாகனமாக ஆதாரைத் தேர்ந்தெடுத்து முக்கியத்துவமளித்ததால் என்.பி.ஆர். தானாகவே பின்னுக்குப் தள்ளப்பட்டது. ஆயினும், ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஆர்.ஜி.ஐ அறிவித்ததன் மூலம் இந்த யோசனை இப்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தரவுகளுடன் 2015-இல் என்.பி.ஆர் ஐ புதுப்பிப்பதற்கான பயிற்சி தொடங்கியது. மேலும், இது 2020 இல் நிறைவடைய உள்ளது. புதுப்பிக்கப்பட்ட தகவல்களின் டிஜிட்டல்மயமாக்கல் முடிவடைந்திருக்கிறது.
என்.பி.ஆர் என்ன வகையான தரவுகளை சேகரிக்கும்?
என்.பி.ஆர் மக்கள்தொகை தரவு மற்றும் பயோமெட்ரிக் தரவு இரண்டையும் சேகரிக்கும். இதில் பெயர் மற்றும் பிறந்த இடம் முதல் கல்வி மற்றும் தொழில் வரை 15 வெவ்வேறு வகை புள்ளிவிவரங்கள் உள்ளன. அதை ஆர்.ஜி.ஐ அதை என்.பி.ஆர்-இல் சேகரிக்க வேண்டும். பயோமெட்ரிக் தரவுகளுக்கு இது ஆதாரை சார்ந்துள்ளது. அதற்காக அது குடியிருப்பாளர்களின் ஆதார் விவரங்களைத் கோரும்.
இது தவிர, நாடு முழுவதும் நடந்து வரும் ஒரு சோதனை ஓட்டத்தில், மொபைல் எண், ஆதார், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் (வசிப்பவர் இந்தியராக இருந்தால்) விவரங்களை ஆர்.ஜி.ஐ கோருகிறது. மேலும், இது பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சிவில் பதிவு முறையை புதுப்பிப்பதிலும் செயல்பட்டு வருகிறது.
2010 ஆம் ஆண்டு பயிற்சியில், ஆர்.ஜி.ஐ மக்கள்தொகை விவரங்களை மட்டுமே சேகரித்தது. 2015 ஆம் ஆண்டில், இது குடியிருப்பாளர்களின் மொபைல், ஆதார் மற்றும் ரேஷன் கார்டு எண்களுடன் தரவை மேலும் புதுப்பித்தது. 2020 பயிற்சியில், இது ரேஷன் கார்டு எண்ணைக் கைவிடும் ஆனால், பிற வகைகளை சேர்க்கும்.
உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகிறபடி, என்.பி.ஆரில் பதிவு செய்வது கட்டாயமாகும்போது பான், ஆதார், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற கூடுதல் தரவுகளை தாமாகவே வழங்க வேண்டும் என்கின்றனர். “இதை கட்டாயமாக்குவது தேவையற்ற வழக்குகளை அழைக்கும். தற்போது வரை இதை கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை. நாங்கள் குடிமக்கள் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறோம். வழங்கப்பட்ட விவரங்களுக்கு எதிராக எந்த ஆவணமும் கேட்கப்படவில்லை அல்லது சரிபார்க்கப்படவில்லை. கிட்டத்தட்ட எல்லா மக்களும் இந்தத் தரவைப் பகிரத் தயாராக உள்ளனர் என்பதை இந்த சோதனை திட்டம் காட்டுகிறது. டெல்லி போன்ற சில நகர்ப்புற பகுதிகளில் மட்டுமே நாங்கள் சில எதிர்ப்புகளை எதிர்கொண்டோம்” என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குடியிருப்பாளர்கள் ஆன்லைனில் என்.பி.ஆர் விவரங்களை புதுப்பிக்கும் வாய்ப்பையும் அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
அரசாங்கம் ஏன் இவ்வளவு தரவை கோருகிறது?
தனியுரிமையைப் பற்றிய கவலைகள் இருக்கும்போது, இவ்வளவு தரவுகளை சேகரிப்பதில் அரசாங்கத்தின் நிலைப்பாடு இரு மடங்காக இருக்கிறது. முதலாவது, ஒவ்வொரு நாடும் அதனுடைய மக்கள்தொகை விவரங்களுடன் அதன் குடியிருப்பாளர்களின் விரிவான அடையாள தரவுகள் இருக்க வேண்டும் என்ற கருத்து உள்ளது. இது அரசாங்கம் தனது கொள்கைகளை சிறப்பாக வகுக்க உதவுவதோடு தேசிய பாதுகாப்பிற்கும் உதவும் என்று அது கூறுகிறது.
இரண்டாவது, பெரும்பாலும் ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, மற்றும் பான் எண்கள் போன்ற தரவு சேகரிப்பை நியாயப்படுத்துகிறது. இது சிவப்பு அதிகார அடுக்கிலுள்ளவர்கள் அடையும் பலனை நீக்குவதன் மூலம் இந்தியாவில் வசிப்பவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்கிறது. இது அரசாங்கம் பயனாளிகளை சிறந்த முறையில் தேர்ந்தெடுக்க உதவுவது மட்டுமல்லாமல், ஆதார் செய்ததைப் போலவே காகிதப்பணி மற்றும் அதிகாரத்தின் தலையீட்டை மேலும் குறைக்கிறது” என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்த அதிகாரியின் கூற்றுப்படி, இது பல்வேறு தளங்களில் வசிப்பவர்களின் தரவை நெறிப்படுத்தும். ஒரு நபரின் வேறுபட்ட பிறந்த தேதியை வெவ்வேறு அரசாங்க ஆவணங்களில் கண்டுபிடிப்பது பொதுவாக இருக்கும். அதை அகற்ற என்.பி.ஆர் உதவும். என்.பி.ஆர் தரவுடன், குடியிருப்பாளர்களின் அலுவலக வேலையில் வயது, முகவரி, மற்றும் பிற விவரங்களுக்கு பல்வேறு சான்றுகளை வழங்க வேண்டியதில்லை. இது வாக்காளர் பட்டியலில் உள்ள போலிகளையும் அகற்றும் என்று அரசாங்கம் வலியுறுத்துகிறது.
இருப்பினும் என்.பி.ஆர் தகவல் தனிப்பட்டது மற்றும் ரகசியமானது என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். அதாவது, இது மூன்றாம் தரப்பினருடன் பகிரப்படாது. இந்த பரந்த அளவிலான தரவைப் பாதுகாப்பதற்கான வழிமுறை குறித்து இன்னும் தெளிவு இல்லை.