கோட்டக்குப்பம் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவி இட ஒதுக்கீடு விபரம்:-
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சிகளில், வார்டு கவுன்சிலர், உறுப்பினர் பதவிக்கான இடஒதுக்கீடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை, பெண்களுக்கு, 33 சதவீதம் இடஒதுக்கீடு இருந்த வந்து நிலையில், தற்போது, 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படியே, வார்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கோட்டக்குப்பம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.
அவற்றில் உள்ள வார்டுகளில், இடஒதுக்கீடு செய்யப்பட்ட விபரம் பின் வருமாறு:
4வது வார்டு, எஸ்.சி. பொது;
11வது வார்டு, எஸ்.சி., பெண்;
7,8,9,10,14,15,16,17 ஆகிய வார்டுகள், பெண்கள் பொது;
மீதம் உள்ள 8 வார்டுகள், பொது பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.