கோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் ஆஷிக்அகமது (வயது32). இவர் புதுவையில் ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி முர்ஷிதாபர்வீன் (28).
நேற்று முன்தினம் ஆஷிக்அகமது தனது மனைவியை பிரசவத்துக்காக புதுவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து விட்டு வீட்டுக்கு வந்தார்.
அப்போது அவரது வீட்டின் மேல் மாடியில் உள்ள கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவில் இருந்த 11 பவுன் நகையும், ரூ.25 ஆயிரம் ரொக்க பணத்தையும் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து ஆஷிக்அகமது கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
மேலும் கொள்ளையர்களை பற்றி துப்பு துலங்க கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.