விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் கணினிமயமாக்கப்பட்ட மின்தடை புகார் பதிவு மையம் திறப்பு விழா நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோரின் மின் தடை குறித்த குறைகளை உடனுக்குடன் சரி செய்ய கணினி மயமாக்கப்பட்ட மின் தடை புகார் பதிவு மையம் 18.78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், விழுப்புரம் மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.இம்மையத்தை அமைச்சர் சண்முகம் திறந்து வைத்தார். இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள 6 லட்சத்து 97 ஆயிரத்து 530 மின் நுகர்வோர் பயன்பெறுகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்களின் மின்தடை குறித்த புகார்களை ‘1912’ அல்லது ‘ 18004255419 ‘ இலவச அழைப்பு தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு பதிவு செய்தால், மின்தடை நிவர்த்தி செய்யப்படும்.
கலெக்டர் சுப்பிரமணியன், சக்கரபாணி எம்.எல்.ஏ., திட்ட இயக்குநர் மகேந்திரன், ஆர்.டி.ஓ., கோட்டாட்சியர் ராஜேந்திரன், தலைமை பொறியாளர் சிவராஜூ, அ.தி.மு.க., நகர செயலர் பாஸ்கரன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணைத் தலைவர் ராமதாஸ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செங்குட்டுவன், முன்னாள் ஒன்றிய செயலர் சுரேஷ்பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.