கோட்டக்குப்பம் சக்கிலி வாய்க்கால் ஓடை ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளதால் மழை காலங்களில் ஓடையில் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மழை காலங்களில் கோட்டக்குப்பம், பரகத் நகர், ஜமியத் நகர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் கோட்டக்குப்பம் சக்கிலி வாய்க்கால் ஓடை வழியாக சென்று கடலில் கலக்கிறது.
இதனால் தொடர் மழை காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்வது தவிர்க்கப்பட்டு இந்த ஓடை வழியாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஓடையின் இரு புறங்களிலும் ஆக்கிரமிக்கப்பட்டு பல இடங்களில் கட்டங்கள் கட்டப்பட்டுள்ளன.
தற்போது புதிதாக லதா ஸ்டீல் அருகே ஓடையில் கட்டிடம் கட்ட வேலை நடந்து வருகிறது. இதனால் ஓடையின் அளவு குறுகி வருகிறது.
மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள ஓடை முறையாக பாரமரிப்பின்றி உள்ளதால் ஓடை முழுவதும் குப்பை கொட்டும் பகுதியாக மாறியுள்ளது.
மேலும் ஓடை முழுவதும் மண்மேடு மற்றும் மரங்கள் சூழ்ந்து ஓடை தூற்ந்து வருகிறது. எனவே ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோட்டக்குப்பம் பேருராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செய்தி உதவி நன்றி : இரணியன் பாண்டியன்