அள்ளப்படாத குப்பைகள்… அலட்சியம் காட்டும் பேரூராட்சி !
கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பழைய பட்டின பாதை நாட்டாண்மை தெரு சந்திப்பில் குப்பைகள் குவிந்து அள்ளப்படாமல் துர்நாற்றம் வீசி வருகிறது.
இங்கு இருக்கும் குப்பை தொட்டியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. ஆனால் கொட்டப்பட்ட குப்பைகள் நீண்ட நாட்களாக அள்ளப்படாமல் சிதறி கிடக்கின்றது.
பொதுமக்களும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் அச்சாலை வழியையே சென்று வருகின்றனர். ஆனால் குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசி வருவதால், அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே கோட்டக்குப்பம் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டாமல் விரைந்து குப்பைகள் அள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.