இந்தியா சுதந்திர தின நிகழ்வாக கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் கோட்டகுப்பத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சைக்கிள் பேரணி மேற்கொள்ளவுள்ளார்கள் .
இப்பேரணியில் மாணவர்கள் பல தெருக்களுக்கு சென்று ப்ளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்பது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளனர் .
ப்ளாஸ்டிக் ஒழிப்புக்கான முன்னெடுப்புகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில் அஞ்சுமன் ஏற்பாட்டில் மாணவர்களின் இம்முயற்சி பாராட்டப்படவேண்டிய ஒரு முன் முயற்சி.
மாணவர்கள்அதிகளவில் ஆர்வமுடன் பங்கேற்று வருங்காலத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க பாடுபடவேண்டும்.