கோட்டக்குப்பம் போலீஸ் நண்பர்கள் மற்றும் பாண்டிச்சேரி ரோட்டரி கிளப் கிரண்ட் இணைந்து, 18/07/2019 அன்று காலை 11.மனிக்கு கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் தலைகவச விழிப்புணர்வு பேரணி ஏற்பாடு செய்திருந்தனர்.
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு .S.Jayakumar m.sc.Agri. அவர்கள் கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.
இதில் காவல்துறைஅதிகாரிகள் , கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்,துனை கண்காணிப்பாளர், ஆய்வாளர்,உதவி ஆய்வாளர், போலீஸ் நண்பர்கள் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் நண்பர்கள் விழுப்புரம் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நாராயணன், துணை ஒருங்கிணைப்பாளர் வினோத்குமார் , கோட்டகுப்பம் உட்கோட்ட ஒருங்கிணைப்பாளர் சையத் ஜாபர், கோட்டகுப்பம் இலியாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பேரணியில் கலந்து கொண்ட 15 நபர்களுக்கும் இலவச தலைகவசம் வழங்கப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகள் இருவருக்கு மனித நேயத்துடன் இலவச தலைகவசத்தை வழங்கிய விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அனைவருக்கும் இலவச தலைகவசம் கொடுத்து பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸ் நண்பர்கள் குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த பேரணி கோட்டக்குப்பம் ஐயனார் கோவில் E.C.R.ரோட்டில் உள்ள பெரிய முதலியார்சாவடி வரைக்கும் சென்று முடிவடைந்தது.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.