கோவையில் சுமார் 100 பள்ளிகளுக்கும் மேல் தொழுகைகள் நடைபெறுகிறது, இதில் சுமார் ஒருநாளைக்கு ஒழுசெய்யபட்ட தண்ணீர் 10 லட்சம் லிட்டர் கோவை நகர் பகுதிகளில் சாக்கடையில் கலந்து கொண்டு இருக்கிறது.
தற்போதய வறட்சியால் நகர் பகுதி பள்ளிவாசல்களில் ஒழு செய்யக் கூட தண்ணீர் இல்லமால் தண்ணீர் வெளியே விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பள்ளி நிர்வாகத்தினரும், பொது மக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலை தொடர்ந்து நடைபெறாமல் இருக்கவும், கோடை கால வறட்சியை சமாளிக்கவும் கோவை ஜமாஅத் இஸ்லாமி ஹிந்த் ஒரு புதிய திட்டத்தினை கையாண்டுள்ளது.
பள்ளிவாசலில் 5 அடி விட்டதில், 12 அடி ஆழத்தில் இரண்டு பெரிய குழிகள் தோண்டப்பட்டு அதில் நீரை சுத்தம் செய்ய மழை நீர் சுத்திகரிப்பு முறை பயன்படுத்தப்படுகிறது. அந்த குழியில் தேவையான கற்கள், இன்னும் அதற்கு தேவையான பொருள்களை இட்டு வேலை நடைபெற்று வருகின்து. இதனால் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் அடுத்தக்கட்ட முயற்சியாக கோவை கரும்புக்கடை மஸ்ஜிதுல் ஹுதா, ஒப்பணகார வீதி அத்தார் ஜமாஅத் பள்ளிவாசல், ஆர்.எஸ்.புரம் குர்ரதுல் அயன் பள்ளிவாசல்களில் தண்ணீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் முயற்சி விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது எனவும் மேலும் இந்த திட்டத்தினை கோவையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் ஜமாஅத் இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் கோவை மாவட்ட மக்கள் தொடர்பு செயலாளர் எம்.அப்துல் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.