ஐரோப்பா, மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இஸ்லாமியர்கள் இன்று தங்கள் 29 வது நோன்பை நிறைவு செய்தன. இதனை தொடர்ந்து இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பிறையை தேடப்பட்டது. ஷவ்வால் பிறை தென்பட்ட காரணத்தால் பிரான்ஸ் போன்ற ஐரோப்பா நாடுகளிலும் மற்றும் சவூதி, துபாய், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நாளை (04/06/2019 – செவ்வாய்க்கிழமை) ஈத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
உலகெங்கும் வாழும் கோட்டக்குப்பம் இணையதள நேயர்களுக்கு ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.