
வருடத்திற்கு இரண்டு முறை பெருநாள் தொழுகைக்கு கூடும் இடமான ஈத்கா மைதானத்தில் சரியான இடைவெளிவிட்டு நேர்த்தியாக மரக்கன்றுகளை
வைத்து பராமரித்து நிழல் தரும் மரங்களாக உருவாக்கி அசத்தியிருக்கிறார்கள் நமது கோட்டக்குப்பம் சேர்ந்த ஜமாத்தார்கள்…..

ஒரு காலத்தில் வெறும் காலி இடமாக இருந்த இடத்தை செப்பனிட்டு, மதில் சுவர் எழுப்பி பராமரித்து வந்தனர்.
ஒரு நாள் அதுவும் ஒரு சில மணி நேரம் பெருநாள் தொழுகைக்காக பந்தலுக்காக மட்டும் பல ஆயிரம் செலவு செய்த நிலையில், அதை குறைக்கும் வகையில் மரம் நெடும் முடிவை ஜமாஅத் எடுத்து.
இன்று மரம் நன்றாக வளர்ந்து பசுமை பூங்காவாக கட்சி அளிக்கிறது. தற்போது நூற்றுக்கணக்கான பறவைகள் தங்கும் சரணாலயமாக காட்சி அளிக்கிறது.
இப்படி ஒரு நல்ல முயற்சி எடுத்த நமது ஜமாஅத் நிர்வாகத்தை அனைவரும் பாராட்டுகிறார்கள்.
