ரமலான் வந்துவிட்டாலே மக்கள் மனதில் ஒரு விதமான சந்தோசம் புன்னகை பிறக்கும் ரமலானில் பல்வேறு நிகழ்சிகளும் சூழல்களும் நமக்கு சந்தோசத்தை ஏற்படுத்தும். அந்த சந்தோசத்தில் ஒன்றுதான் இப்தாருக்காக பள்ளிவாசலுக்கு நோன்பு திறக்க செல்வது.
பள்ளிவாசலுக்கு சென்று கஞ்சி குடித்து அங்கே கொடுக்கப்படும் வடை, போண்டா, சமோசா, போன்றவற்றை சாப்பிட்டு நோன்பு திறந்துவிட்டு வருவது பலரும் விரும்பவார்கள் பள்ளியில் காய்ச்சப்படும் கஞ்சி சிறு குழந்தைகள் சென்று வாங்கி வந்த கஞ்சியை தங்கள் வீ்ட்டில் உள்ள அனைவர்களும் அந்த கஞ்சியை கொன்டு நோன்பு திறப்பது தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும் வழக்கமாக உள்ளன.
அல்லாஹ்வின் கிருபையால் நதூரிலும் இந்த நிகழ்வுகள் வருடா வருடம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் இதே சூழல் நமதூரை சுற்றி இஸ்லாமியர் வாழும் பகுதிகளில் நிகழ்கிறதா? என்று இந்த ரமலானில் நாம் சற்று யோசித்து பார்க்க வேண்டும்.
நமதூருக்கு சற்று தொலைவில் உள்ள கிராமங்களில் இருக்கும் பள்ளிவாசல்களுக்கு போதிய வசதியின்மையின் காரணத்தால் குறிப்பிட்ட நோன்புகளுக்கு பிறகு கஞ்சி காய்ச்சுவதில்லை.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள் – எவர் ஒருவரை நோன்பு திறக்க வைப்பாரோ அவருக்கு அந்த நோன்பாளிக்கு கிடைக்கும் கூலியை போன்றே வழங்கப்படும். அவரது கூலியில் எந்த ஒன்றும் குறைக்கப்பட மாட்டாது.. (அஹமத், திர்மிதி)
இதன் அடிப்படையில் கடந்த இரண்டு வருடங்களாக கோட்டக்குப்பம் YSA நண்பர்கள் முயற்சியால் – வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களிடம் இந்த ஊர்களுக்காக வசூல் செய்து கொடுத்து அவர்களும் நோன்பு கஞ்சி காய்ச்ச உதவி செய்ய முயற்சி எடுத்து வருகிறோம்.
இந்த வருடம் 8 பள்ளிவாசல்களுக்கு பணம் உதவி செய்யப்பட்டது.
பணம் கொடுத்து உதவிய அன்பர்களின் குடும்பங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் நன்மை செய்வான்.