விழுப்புரம், புதுவையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி!
முதல் முறையாக தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் துறையில் வேதாந்தா நிறுவனம் கால் பதிக்கிறது.
விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் எரிவாயு கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்காக, சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த அறிக்கை தயார் செய்ய வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் 116 எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கு அனுமதி கோரி சுற்றுச்சூழல் துறையிடம் வேதாந்தா நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது.
தூத்துக்குடியை நாசம் செய்த வேதாந்தா நிறுவனம் ……
அடுத்து நமது பகுதியை சுடுகாடாக வருகிறது
மக்களை மீறி எந்த ஒரு அரசியல்வாதியும் ஒன்றும் செய்ய முடியாது,
மக்களின் அழிவு உறுதியாகி உள்ளது,
மக்களே விழிப்புர்ணவு பெறுங்கள், தூங்கிக் கொண்டு இருக்கும் மக்களே விழித்துக் கொள்வோம்………..