கோட்டகுப்பதில் வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்கள் தடுக்கும் விதத்தில் முக்கிய தெருக்களில் பாதுகாப்பு கருதி, ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஊரின் முக்கிய தெருவில் பல இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் தற்போது செயல்படாமல் உள்ளது என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் தெருக்களில் உள்ள கேமராக்கள் இருந்தும் பயனற்ற நிலையில் உள்ளதால் குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே அதை தடுக்க வசதியாக, மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் பொருத்தப்பட்ட கேமராக்கள் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வருகிற நோன்பு காலத்தில் ஜக்காத் வாங்க வெளியூர் மற்றும் வெளி மாநில மக்கள் நமதூரில் அதிகம் நடமாடுவார்கள். இவர்களில் சிலர் திருட்டு, வழிப்பற்றி போன்ற குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது.
அதனால் சம்மந்தப்பட்ட தெருவில் இருக்கும் இளைஞர்கள் தங்கள் தெருவில் செயல்படாமல் இருக்கும் கண்காணிப்பு கேமராவை செயல்படுத்தவும், இயங்கிக்கொண்டு இருக்கும் கண்காணிப்பு கேமரா நல்ல நிலையில் உள்ளதா என்று சரி பார்க்கவேண்டும்.
மேலும் ஊரில் குறிப்பிட்ட தெருக்களை தவிர மற்ற தெருக்களில் கண்காணிப்பு கேமரா வைக்கப்படாமல் உள்ளது. அதையும் அந்தந்த பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கேமரா அமைக்க முயற்சி செய்ய வேண்டும்.
ஊரில் சிலர் கண்காணிப்பு கேமரா அமைப்பது தொடர்பான தொழில் செய்கிறார்கள், அவர்கள் சமூக நோக்கத்தில் இந்த விஷயத்தில் தங்களின் பங்களிப்பை செய்து ஊரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
இனியாவது கண்காணிப்பு கேமராக்கள் காட்சி பொருளாக இல்லாமல், பொது மக்களின் பாதுகாப்புக்கு உறுதி கூறும் பொருளாக இருக்கனும்.