
2019-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5 அன்று நடைபெற உள்ளது. தமிழகத்திலிருந்து இந்தத் தேர்வை 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுத உள்ளனர். தேர்வு ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்பட 11 மொழிகளில் நடைபெற உள்ளது. தேர்வுக்குத் தயாராவதில் இறுதிக்கட்டத்தில் இருப்பீர்கள். தேர்வுக்குத் தயாராகும் வகையில் சில யோசனைகள்:

# இறுதிகட்டத்தில் புதிது புதிதாகப் படித்துக்கொண்டி ருக்காமல், ஏற்கெனவே படித்த இயற்பியல், வேதியியல், தாவர வியல், உயிரியல் பாடங்களைத் திருப்பிப் பாருங்கள். திருப்பிப் படிப்பதன் மூலம் இறுதிக் கட்டத்தில் முழுமையாகப் படித்த உணர்வு ஏற்படும். தேர்வை எதிர் கொள்ள அது உத்வேகம் அளிக்கும்.
# நீட் தேர்வுக்குப் பெரும்பாலும் மேல்நிலை வகுப்புப் பாடங்களிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும். எனவே, முதலில் 12-ம் வகுப்புப் பாடங்களைத் திருப்பிப் படியுங்கள். 11-ம் வகுப்பு பாடங்களைப் பின்னர் படியுங்கள். 12-ம் வகுப்புப் பாடத்திலிருந்து அதிகக் கேள்விகள் கேட்க வாய்ப்பு இருப்பதால், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்காகப் படித்த பாடங்களைப் படிப்பது சற்று எளிதாக இருக்கும்.
# மேல்நிலைப் பள்ளிப் பாடங்களைத் திருப்பிப் படிப்பதோடு விட்டுவிடாதீர்கள். தற்போதுள்ள குறுகிய காலத்தில் இரண்டு மணி நேரம் ஒதுக்கி, மாதிரித் தேர்வை எழுதிப் பாருங்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் மாதிரித் தேர்வுகளை எழுதிப் பாருங்கள். புரிதலுடன் தேர்வை எதிர்கொள்ள இந்த உத்தி வழி ஏற்படுத்திக் கொடுக்கும்.
# மாதிரித் தேர்வு எழுதிய பிறகு எந்தெந்தப் பகுதிகளில் பலவீனமாக இருக்கிறோம் என்பதை அறிய உதவும். எனவே, பலவீனமான பகுதிகளை இழுத்துப்போட்டுக் கொண்டு கடைசி கட்டத்தில் படிக்க வேண்டாம். கடைசி நேரத்தில் இது தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்திவிடும். பலவீனத்தை அறிந்துகொண்டு மற்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டும் போதுமானது.

# ஏற்கெனவே நீட் தேர்வு எழுதியவர்களுடன் கலந்துரை யாடுங்கள். கேள்வித்தாள் எப்படி அமைக்கப்பட்டிருந்தது; எந்தெந்தப் பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருந்தது என்பதைக் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதன்மூலம் உங்களுக்கு பலமாக மற்றும் பலவீனமாக உள்ள பகுதிகளை அறிந்து கடைசி நேரத்தில், அதில் கவனம் செலுத்தலாம்.

இதெல்லாம் மறக்காதீங்க… # நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் வெளிர் நிறத்திலான ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும். # அரைக்கை சட்டைகள் மட்டுமே அணிந்துவர வேண்டும். # ஷூ அணியக் கூடாது. பூக்கள், பேட்ஜ்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது. # பெரிய பட்டன்களைக் கொண்ட சட்டைகளை அணியக் கூடாது. குறைவான உயரமுள்ள சாதாரண காலணிகளையே அணிய வேண்டும். # தொலைத்தொடர்பு சாதனங்கள், ஜியோமெட்ரி பாக்ஸ், பென்சில் பாக்ஸ், கைப்பைகள், பெல்ட், தொப்பி, நகைகள், வாட்ச், உலோகப் பொருட்கள் ஆகியவற்றை எடுத்து வரக் கூடாது. # சோதனைகளுக்காகத் தேர்வுக்கு ஒன்றரை மணி நேரம் முன்பே சென்றுவிட வேண்டும். |
-மிது (www.kamadenu.in), photos: google