
வங்கிகள் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என்ற செய்தி சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பரவியது குறித்து விளக்கம் அளித்த ரிசர்வ் பேங்க், “சில ஊடகங்கள் வங்கிகள் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என்று RBI அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதில் உண்மை இல்லை.

RBI அதுபோன்று எந்தவொரு சுற்றறைக்கையும் வெளியிடவில்லை. அனைத்து வங்கிக் கிளைகளும் தற்போது உள்ளது போன்று மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் வாரங்களில் மட்டுமே 5 நாட்கள் இயங்கும். ஞாயிற்றுக்கிழமை எப்போதும் போல விடுமுறை.” என்று ரிசர்வ் பேங்க் விளக்கம் அளித்துள்ளது.