
மக்களவை தேர்தல் தமிழகத்தில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இன்னும் சுமார் ஒரு மாதகாலம் இருக்கின்றன தேர்தலின் முடிவுகள் தெரிய. எல்லாம் இடங்களிலும் பதிவான ஒட்டு இயந்திரங்களை தொகுதி வாரியாக ஒரேயிடத்தில் வைத்து மே 23ம் தேதி வாக்குகள் எண்ணப்படும். அனைத்து வாக்கு என்னும் மையங்களும் துணை ராணுவம் கொண்டு பாதுகாக்கப்படும். வேட்பாளர்கள் மற்றும் உதவியார்கள் அனுமதி பெற்று உள்ளே சென்று வரலாம். 24 மணிநேரமும் இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை வேட்பாளர்கள்/உதவியார்கள் பாதுக்காக்க வேண்டும்.

என்ன செய்ய வேண்டும் வேட்பாளர்கள்/உதவியார்கள்
- எல்லா நேரங்களிலும் ஒரே நபரை பாதுகாப்பு பணியில் அமர்த்தக்கூடாது, முடிந்தால் 3 ஷிப்ட்கள் கொண்டு அமர்த்த வேண்டும்.
- அந்த ஷிப்ட்டில் உள்ள நபர் மற்ற வேட்பாளர்களின் உதவியாளர்கள் மற்றும் அதிகாரியிடம் வீண் பேச்சு வைத்துக்கொள்ளக்கூடாது. அதுவே பழக்கம் ஏற்பட்டு வந்த வேலையை மறந்துவிடுவர்.
- மொபைலில் கேம், செய்தி, சினிமா போன்ற எந்த ஒரு மூளையை திசை திருப்பும் செய்யலும் செய்யக்கூடாது.
- இந்த பணியில் இருக்கும் நபர் மிகுந்த சுறுசுறுப்பு மற்றும் கேள்வி நியாயம் இருக்கும் நபராக இருந்தால் மிக்க நன்று.
- வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையை யார் திறந்தாலும் அவர்களிடம் எதற்காக திறக்குறிங்க என்ன பணி செய்ய போகிறீர்கள் என்று கேட்க வேண்டும். அவர்களின் பெயர், திறந்த நேரம், அறையில் இருந்த நேரம், கூடஇருந்தவர்களின் விபரம் போன்ற அனைத்தையும் உங்கள் ரிஜிஸ்டரில் பதிவு செய்ய வேண்டும்.
- அறையை சுற்றி உள்ள ஜன்னல்கள் சரியாக முடியிருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
- மின் இணைப்பு துண்டித்தால், உடனே அங்கே இருக்கும் அதிகாரியிடம் தெரியப்படுத்துங்கள், அதிக நேரம் எடுத்தால் உயர் அதிகாரிக்கு தெரியப்படுத்துங்கள்.
- எல்ல அதிகாரிகளின் மொபைல் நம்பர்களை சேமித்துவைய்யுங்கள்.
- இரவு பணியில் இருக்கும் நபர் மிகுந்த உற்சாகத்துடன் இருக்க வேண்டும்.
- அறையில் உள்ள கண்காணிப்பு கேமரா வேலை செய்கின்றதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

இதுபோல இன்னும் நிறைய குறிப்புக்கள் இருக்கிறது. ஆகையால் வேட்பாளர்கள்/உதவியார்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும், பல கோடி வாக்காளபெரு மக்கள் சிரமப்பட்டு, ரொம்ப தூரம் சென்று, கால்கடுக்க நின்று ஜனநாயக கடமையான தேர்தலை நிறைவேற்றி உள்ளார்கள். நீங்கள் சரியாக காண்காணித்து உங்கள் எண்ணங்கள் மற்றும் ஜனநாயக சிறக்க வாழ்த்துகின்றோம்.
images courtesy : google