முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவச சலுகைகளையும், குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களையும் வழங்கி வாடிக்கையாளர்களை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால், மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், ஜியோ நிறுவனம் தினமும் 25 ஜிபி டேட்டாவை மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்குவதாக செய்தி ஒன்று வெளியானது. ஜியோ பம்பர் ஆஃபர் என்ற பெயரில் இந்த அறிவிப்பு வெளியானது.
இந்த ஆஃபரில் தினமும் 25 ஜிபி டேட்டா 3 மாதத்திற்கு முற்றிலும் இலவசமாக வழங்கபப்டுமாம். அதாவது ஜூன் மாதம் வரை இலவசமாக தினமும் 25 ஜிபி டேட்டா பெறமுடியுமாம். இண்டஹ் ஆஃபரை பெற மைஜியோவுக்கு சென்று ஆக்டிவேட் செய்ய வேண்டும் என அந்த தகவல் வெளியானது.


இதனால் வாடிக்கையாளர்கல் குஷியான நிலையில், இந்த தகவ்ல் பொய்யானது இது வெறும் வதந்தி என தெரியவந்துள்ளது. ரிலையன்ச் ஜியோ தரப்பில் தினமும் 25 ஜிபி டேட்டா இலவசம் என எந்த ஆதிகாரப்பூர்வ அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடத்த இரு தினம்களாக எல்லா மொபைலுக்கும் பொய்யான குறும்செய்தி வருகிறது. அந்த லிங்க்கை சென்று பார்த்தால் அது போலியான இணையத்தளமாக உள்ளது. தயவு செய்து யாரும் அந்த ஆஃப் டவுன்லோட் செய்யவேண்டாம், இது போலியான ஆஃப், உங்கள் தகவல்களை திருட பயன்பெறும் ஆஃப். மக்களே உஷார்!!.