வானூர் தொகுதி வரைபடத்தின் இடியாப்ப சிக்கல் பிரச்னைகள் பல – கவனம்கொள்வார்களா வேட்பாளர்கள்?


இந்திய வரைபடத்தில் உள்ள தொகுதிகளில் இடியாப்ப சிக்கலில் இருக்கும் தொகுதி வானூர், இது தமிழ்நாடு மாநிலத்தை சேர்த்த பகுதி. அது என்ன இடியாப்ப சிக்கல்? வானூர் தொகுதியின் வரைபடத்தை பார்த்தாலே தெரியும் உங்களுக்கு. வானூர் வரைபடத்தில் உள்ள பெருபான்மையான ஊர்கள் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தோட பின்னிப்பிணைத்துள்ளது. ஒரு ஊருக்கு ஐந்து அல்லது பத்து பார்டர் (எல்லை கோடு) இருக்கும், ஆனால் வானூர் தொகுதியில் சுமார் 100 பார்டர்கள் இருக்கின்றது. ஒரே தெருவில் ஒருபுறம் தமிழ்நாடு… மறுபுறம் புதுச்சேரி, நடுவில் பார்டர். இப்படி பல பகுதிகள்.  இங்குள்ள மக்கள் பெரும்பாண்மையானவர்களிடம்  கேட்டால் “எங்க ஊர் பாண்டிச்சேரி” “பாண்டிருந்து வரோம்” “நான் பாண்டிசேரியன்”  என்று தான் சொல்லுவார்கள். எதனால் பார்த்தால் அவர்களின் அன்றாட தேவைகள் கல்வி, வேலைவாய்ப்பு, சந்தை, மருத்துவம், போன்ற அனைத்தும் புதுச்சேரியை நோக்கியே இருக்கிறது, பெயரளவுக்கு இவர்கள் தமிழ்நாடு மற்றபடி இவர்கள் புதுச்சேரி.

மருத்துவம்: கோட்டகுப்பத்தில் ஒருவருக்கு மருத்துவ அவசரம் என்றால் 5km உள்ள புதுச்சேரி அரசு மருத்துவமனையை கொண்டுசெல்ல வேண்டியுள்ளது, அங்கு சிறந்த மருத்துவம் அளித்து வீட்டிற்கு அனுப்புகிறார்கள், ஆனால் மாதாந்திர மாத்திரைகள் கொடுப்பதில்லை, அதற்கு அவர்களிடம் அதிகாரம் இல்லை. கோட்டகுப்பதிலிருந்து 40km தொலைவில் உள்ளது விழுப்புரம் அரசு மருத்துவமனை.

கல்வி: வானூர் தொகுதியில் ஒரு அரசு கல்லூரியும் இல்லை, புதுச்சேரியில் தான் படிக்க வேண்டும், என்ன தான் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஓரே புதுச்சேரி அரசு பள்ளியில் படித்தாலும் புதுச்சேரியில் உள்ள அரசு கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்க்கு அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் (Merit), அல்லது பிற மாநில கோட்டாவில் தகுதி பெற வேண்டும் இல்லையென்றால் அனுமதி கிடைக்காது, பாதிபேர் கல்லூரி படிப்பை விட இதுவும் ஒரு காரணம்.

சந்தை: வானூர் தொகுதியில் உள்ள வணிகர்கள் புதுவையிருந்து தான் பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்கிறார்கள், தமிழ்நாடு வரியை விட புதுவையில் வரி சற்று குறைவு அனைத்து சந்தை விலையும் புதுவை விலையாக இருக்கும். பிரிட்ஜ், வாஷிங் மெஷின், A/C எதுவாக இருந்தாலும் புதுவை தான்.    பெரிய நிறுவனங்கள் தங்கள் கிளைகளை இந்த பகுதிகளில் திறப்பதில்லை, உதாரணமாக இரண்டு மற்றும் நான்கு சக்கரங்கள் விற்பனை நிறுவனம், பெட்ரோல் பங்க், எலக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல்  மற்றும் பல., இந்த தொகுதியில் பெரும்பான்மையான வாகனங்கள் PY01, PY05 போன்ற பதிவுகளில் தான் இயங்கும், அரசு வாகனங்கள் தவிர. 

காவல்துறை: இந்த தொகுதியில் குற்றவாளிகள் மிக துணிச்சலாக உலா வருவார்கள். தமிழ்நாட் தெருவில் குற்றம் செய்து புதுவை தெருவில் தங்கி கொள்ளுவதும்,  புதுவையில் உள்ள ஒரு வீட்டில் குற்றம் செய்து தமிழ்நாட்டில் தங்கி கொள்ளுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்கவே விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி போலீசார்கள் ஒருங்கிணைத்து செயல்படுகிறார்கள். காவல்துறையினர்களுக்கு குற்றவாளி பிடிக்க  பெரும் சவாலாகவே இருக்கின்றது.

எல்லாமே புதுவைத்தான்: இந்த தொகுதியில் மத்திய அரசின் தபால் துறை, தொலைத்தொடர்பு துறை, வங்கிகள், வீட்டு சமையல் எரிவாய்வு போன்ற அனைத்தும் புதுச்சேரி தலைமையாக கொண்டே இயங்கி வருகிறது. இப்படி சுதந்திர அடைந்தது முதல் இங்குள்ள மக்கள் படும்பாடு கொஞ்சமில்லை, வரியெல்லாம் ஒரு நாட்டில் கட்டிவிட்டு இன்னொரு மண்ணில் பயணிகிறார்கள். ஒரு நாடு ஒரு வரி என்று இருக்கும் அரசு இதுபோல உள்ள பகுதிகளை முதலில் ஆயீவு செய்து மக்களுக்கு சின்னசிறு பிரச்னை இல்ல வாழ வழி செய்யவேண்டும். புதுச்சேரி, கடலூர் மற்றும் விழுப்புரம் தொகுதி வெற்றி வேட்பாளர்கள் இந்த பிரச்னையை நாடாளுமன்றத்தில் பேசி சரி செய்து, வரும்கால சங்கதிகளை சுமூகமாக வாழ வழி செய்ய இறைவனிடம் இறைஞ்சிகின்றோம்.  புதுச்சேரி மாநில அந்தஸ்தை பெற்றால் இந்த இடியாப்ப சிக்கல் பிரச்னை தீருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s