
மின் இணைப்பு பெறுவதற்கு மின் அலுவலகத்தில் மட்டுமே விண்ணப்பம் வழங்கவேண்டும். தனி நபரிடம் கொடுத்து ஏமாற வேண்டாம் என மின்வாரிய செயற்பொறியாளர் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து விழுப்புரம் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விழுப்புரம் நகர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், மின் இணைப்பு கொடுப்பதாகக்கூறி தனி நபர் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளதாக புகார் வந்துள்ளது. எனவே பொதுமக்கள் புதிய மின் இணைப்பு பெற விண்ணப்பத்தை, மின் அலுவலகத்தில் பிரிவு அலுவலரிடம் கொடுத்து, அலுவலகத்திலேயே, அலுவலர் வழங்கும் நோட்டீஸ் அடிப்படையில் பணம் செலுத்தவேண்டும். தனி நபர் யாராவது உங்களை அணுகினால் உடன் மின் அலுவலகத்தில் அல்லது போலீசில் புகார் தெரிவிக்க வேண்டும். அடையாளம் தெரியாத நபர்களிடம் ஏமாற வேண்டாம் எனக்கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு விழுப்புரம் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
