கோட்டகுப்பதில் குடிநீர் பஞ்சம் தலை தூக்கி விட்டது; வீடுகளுக்கு குழாய்களில் தண்ணீர் வரவில்லை
கோட்டகுப்பதில் கோடைக் காலம் தொடங்கும் முன்பே பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஆரம்பித்து விட்டது.
சமீபத்தில் குடிநீர் வரியை 100 சதவீதம் உயர்த்திய பேரூராட்சி நிர்வாகம். குடிநீர் வரியை மட்டும் வாங்குகிறார்கள், தாகம் தீர்க்க தண்ணீர் கொடுப்பதில்லை.
பல மாதமாக பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் கொடுக்காமல் கட்டணம் வசூல் செய்வதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வீடுகளில் உள்ள குழாயில் தண்ணீரை பார்த்து பல மாதமாகி விட்டது. தண்ணீர் வராவிட்டாலும் குடிநீர் கட்டணத்தை மட்டும் கேட்கிறது பேரூராட்சி
குளிப்பதற்கு வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறு மூலம் கிடைக்கும் தண்ணீர் கை கொடுக்கிறது. இப்போதே குடிநீர் பஞ்சம் தலை தூக்கிவிட்டது. மே, ஜூன் மாதங்களில் ஆழ்துளை கிணற்றிலாவது தண்ணீர் வருமா? என்பது சந்தேகம் தான். ஊரை சுற்றி உள்ள குடிநீர் எடுக்கும் நிறுவனங்களால் நிலத்தடி நீர் மட்டம் கீழே போய்க்கொண்டிருக்கிறது..
ஊரில் இருக்கும் குளம் குட்டை அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்து விடுகளாகி விட்டது. பள்ளிவாசல் குளமும் துர் வராமல் குப்பை தொட்டியாக காட்சியளிக்கிறது.
ஊரின் முக்கிய பகுதியான ஹாஜி ஹுசைன் தெரு நாட்டாண்மை தெரு பள்ளிவாசல் தெருக்களில் பல நாட்களாக குழாய்களில் குடிநீர் வரவில்லை என்று அப்பகுதியினர் கூறுகின்றனர். இதுகுறித்து விசாரித்தபோது அழுத்தம் இல்லாததால் தண்ணீர் இந்தப் பகுதிக்கு வருவதில்லை என்று கூறுகிறார்கள்.
வசதி உள்ள பலர் வீடுகளில் , வர்த்தக நிறுவனங்களில் , திருமண மண்டபங்களில் , திருட்டுத்தனமாக மின் மோட்டார் மூலம், குடிநீரை உறிஞ்சுகின்றனர்.
இதனால், மேடான பகுதியில் உள்ள வீடுகளில் குடிநீர் வருவதில்லை.முறைகேடாக பயன்படுத்தும், மின்மோட்டாரை பறிமுதல் செய்ய வேண்டிய பேருராட்சி அதிகாரிகள், சிலரின் குறுக்கீடு காரணமாக, மோட்டார்களை பறிமுதல் செய்ய தயக்கம் காட்டுகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு அதிரடியாக வீடுகளில் சோதனை செய்து பறிமுதல் செய்த மோட்டார்களை சிறு அபராதம் விதித்து திருப்பி கொடுத்து விட்டார்கள்.
இப்போதே இந்த நிலை என்றால் மே, ஜூன் மாதங்களில் எப்படி போதிய அழுத்தம் இருக்கும்?”.
பல லட்சம் செலவு செய்து கோட்டக்குப்பம் பெரிய பள்ளிவாசல் அருகில் இருக்கும் மேல் நிலை குடிநீர் தொட்டி தண்ணீர் விநியோகம் செய்யாமல் வெறும் காட்சிப் பொருளாக இருக்கிறது. கோட்டைமேட்டில் இருந்து ரஹ்மத் நகர் வரை தண்ணீர் எடுத்து போகும் பேரூராட்சி நிர்வாகம், ஊரின் முக்கிய பகுதியில் இருக்கும் இந்த தண்ணீர் தொட்டிக்கு எடுத்து வந்தால் இந்த பகுதியில் இருக்கும் வீடுகளில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும்.
கோட்டகுப்பதை சுற்றி உள்ள ஊர்களில் இருந்து சுவையான தண்ணீர் பிடிக்க பொதுமக்கள் கோட்டக்குப்பம் தான் வருகிறார்கள். 24 நாள் மணி நேரமும் வெளியூர் மக்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு இருக்கும் தண்ணீர் குழாயில் தாராளமாக தண்ணீர் பிடித்து செல்கிறார்கள்.
கொடுமை என்னவென்றால் வெளியூரில் இருந்து தண்ணீர் பிடிக்க வரும் மக்களுக்கு தண்ணீர் கொடுக்கும் பேரூராட்சி, தண்ணீர் வரி கட்டும் உள்ளூர் மக்களுக்கு தண்ணீர் கொடுப்பதில்லை.
உடனே ஊரில் முறைகேடாக குடிநீர் உறிஞ்சும் மின் மோட்டார்களை பறிமுதல் செய்ய, தயக்கமின்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு குடிதண்ணீர் பிரச்சனை தீர நடவடிக்கை எடுக்க வேண்டும்
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.