ரயிலில் செல்ல முடிவு செய்தால், இனி கடைசி நேரத்தில் கூட போர்டிங் பாயின்டை மாற்றிக் கொள்ளலாம் என ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. நீங்கள் ரயிலில் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு செல்வதற்கு ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் புக்கிங் செய்கிறீர்கள். ஆனால் உங்களால் முன்பதிவு செய்த நாளில் அதே ஊரில் இருந்து புறப்பட முடியாமல் போகலாம்.

அதற்காக ஐஆர்சிடி நிறுவனம் ஊரின் போர்டிங் பாயிண்டை மாற்றிக்கொள்ளும் வசதியை இணையத்தில் வைத்திருந்தது. இதன்படி நீங்கள் ஐஆர்சிடி கணக்கினை லாகின் செய்து, My Transactions’ பகுதிக்கு சென்று, Booking History’ சென்றீர்கள் என்றால், முன்பதிவு செய்த ஊரில் இருந்து அதற்கு உள்ளாக இருக்கும் இடங்களை காட்டும். அந்த லிஸ்டில் உள்ள ரயில்நிலையங்களில் எதை வேண்டுமானாலும் போர்டிங் பாயின்டை மாற்றிக் கொள்ள முடியும்.
How to change Boarding Point after booking ticket on IRCTC website:
- Login to IRCTC website with your login ID and password.
- Go to Booked Ticket History.
- Select your train or PNR and go for Change Boarding Point, the new page will open.
- Select the new Boarding Station from drop-down list, under Change Boarding station section.



ஆனால் ஐஆர்சிடிசியின் இந்த விதிமுறை 24 மணிநேரத்துக்கு முனபாக மட்டுமே போர்டிங் பாயிண்டை மாற்றிக் கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. இப்போது 4 மணி நேரமாக ஐஆர்சிடிசி குறைத்துள்ளது. அதன்படி பயணிகள் சார்ட் தயாராகும் முன்வரை நீங்கள் ஏறும் ரயில் நிலையத்தை மாற்றிக்கொள்ளலாம். இதேபோல் புதிய போர்டிங் ஸ்டேஷனில் நேரில் சென்று கடிதம் ஒன்றைக் கொடுத்ததும் மாற்றிக்கொள்ள முடியும். இல்லாவிட்டால் 139 என்ற எண்ணில் அழைத்தும் ஏறும் இடத்தை மாற்றமுடியும். இந்தப் புதிய விதிமுறைகள் வரும் மே 1-ம் தேதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது