கடந்த 2013-14ஆம் ஆண்டு இந்தியாவில் காங்கிரஸ் எதிரான மக்கள் மனநிலையை கொண்டு மே 2014 நரேந்திர மோடி அவர்கள் இந்திய பிரதமராக தேந்தேடுக்கப்பட்டார். நடுநிலை மக்கள் சற்று நிம்மதி அடைத்தனர். அவரின் முதல் நிகச்சியான பதவி ஏற்பு விழாவில் இந்திய துணைக்கண்டம் உள்ள நாடுகளின் அதிபர்களை அழைத்து சிறப்பு செய்தார். இது மக்களிதையே புதிய மதிப்பை உண்டாகியது .

அதன் பின் உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது, டிஜிட்டல் இந்தியா, கிளீன் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி, மேக் இன் இந்தியா போன்ற நிறைய திட்டங்கள் அறிவிக்கபட்டது. இது மக்களுக்கு உற்சாகத்தை தந்தது. நம் நாடு உலகின் தலை சிறந்த ஜப்பான், சிங்கப்பூர், பிரான்ஸ் போன்ற தூய்மை, ஊழல்கள் இல்ல நாடக போற்ற படப்போகிறது என்று மக்கள் ஏக்கத்தில் இருந்தனர்.
இந்தியாவை பொருத்தவரை பண்முக சமூகம் கொண்ட நாடக இருக்கிறது. இங்கே பல மொழிகள் பேசும் மக்கள், பல கலாச்சாரம் கொண்ட மக்கள், பல மதம்கள் ஏற்ற மக்கள் என்று பல பல உள்ளது. இவர்களை கைகழுவி விட்டு எந்த ஒரு காரியமும் செய்ய முடியாது.
அனால் நடந்ததோ வேறு, இதற்க்கு நேர்மாறாக அறிவிப்புகள், திட்டங்கள் அறிவிக்கபட்டது.
மொழி பேசும் மக்களின் உரிமைகள் மீறப்பட்டது, மதம் ரிதியாக மக்கள் துன்பங்களை அனுபவிக்க ஆரம்பித்தனர், தலித்துகள் மீது தாக்குதல் செய்யப்பட்டது. இப்படி பல பகுதிகளில் கசப்பான நிம்மதி இல்ல வாழ்க்கையை மக்கள் அனுபவித்தனர். ஆளும்கட்சி அமைச்சர்கள், உறுப்பினர்கள், உள்ளூர் கடைநிலை நிர்வாகிகள் என்று பல பேர் பல விதமாக மக்களை நிம்மதி இல்ல வாழ செய்தனர். இதனை தடுக்கும் பொறுப்பில் இருக்கும் நரேந்திர மோடி அவர்கள் அமைதியாக இருந்தார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன் போன்ற வெளிநாடுகளுக்கு சென்று இந்தியாவை பற்றி பெருமையாக பேசும் மோடி அவர்கள் உள்ளூரில் இருக்கும் கடைநிலை கட்சி காரனிடம் ஏன் இதை செய்கிறீர்கள் என்று கேட்க முடியவில்லை. யார் யாரோ வெறி புடித்து, மனிதர்களை பல துன்பங்களுக்கு நிறுத்தினர். அப்போல்லாம் விட்டுவிட்டு, “நான் உங்கள் காவலாளி” என்று இப்போ வந்து இருக்கிறீர்கள். இதனை நம்பினால் “நான் பகுதி நேர காவல்காரன்” என்று பழைய முறையில் செயல்படுவீர்கள் என்று எங்கள் அனைவருக்கும் அய்யம் வருகிறது. யார் எங்கள் காவலாளி? பண் சமூகம் கொண்ட எங்கள் நாட்டில் யார் உண்மையான காவல்காரன்??

எந்த ஒரு ஆட்சியில் சிறுபான்மையர், தலித்துகள் மனிதர்களாக மதிக்கப்படுகின்றாரோ மற்றும் சம உரிமை வழக்கப்படுகிறதோ அந்த ஆட்சி மிக சிறந்த ஆட்சியாக வரலாறு பேசும். மனிதம் வளரட்டும்! நாம் அனைவரும் சேர்த்து இந்தியாவை தலை சிறந்த நாடாக உயர்த்துவோம். பல மொழிகளை வளர்ப்போம்! பல கலாச்சாரங்களை உயிர்ப்பிப்போம்!!
வாழ்க ஜனநாயகம்! வளர்க இந்தியா!!!