கடந்த சில மாதங்களாக இந்தியாவில் மாணவ மாணவிகள் அதிகமாக விளையாடிய ஆன்லைன் விளையாட்டு என்றால் அது பப்ஜி கேம் என்பதுதான் உண்மை …

முகம் தெரியாதவர்கள், தெரிந்தவர்கள் என உலகின் எந்த மூலையில் அமர்ந்து இருந்தாலும் பப்ஜி கேம் விளையாடும் போது ஒன்றாக இணைந்து விடுவார்கள், மொத்தம் 100 பேர். அதில் தனி ஆளாக மற்ற 99 பேரை தாக்குவது முதல் அல்லது நான்கு பேராக சேர்ந்துகொண்டு மற்ற 96 பேரை தாக்கி அழிக்க வேண்டும். ஆக மொத்தத்தில் 100 பேர் ஆன்லைனில் சேர்ந்து விளையாடுவார்கள். இப்படியாக செல்லும் இந்த விளையாட்டால் பெரும் பிரச்சனை தான் உண்டாகிறது.
காரணம் இந்த விளையாட்டின் மீது கொண்ட அதிக ஆர்வம். காலப்போக்கில் அவர்களை ஒரு பைத்தியம் போன்று ஆக்கி விடுகிறது என்றே கூறலாம்..
நேரம் காலம் தெரியாமல் விளையாடுவது… இரவு முழுக்க விளையாடுவது. ஒரு முறை தோற்றுவிட்டால் மீண்டும் மீண்டும் விளையாட தூண்டுவது..

ஒரு முறை விளையாட அரை மணி நேரமாவது ஆகும். ஒருவேளை அதில் வெற்றி பெற வில்லை என்றால், மீண்டும் மீண்டும் விளையாடுவது. சரியான நேரத்தில் தூங்க முடிவதில்லை. படிப்பில் கவனம் சிதறுதல். எந்த நேரமும் போனை காதில் வைத்த படியே. ஆன்லைனில் மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்கியபடி எதிரிகளை தாக்குவது என மும்முரமாக இருக்கும் போது தம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பது கூட புரிந்துக் கொள்ள முடியாத நிலைமை.
சரியான நேரத்திற்கு உண்பது கூட கிடையாது. படிப்பு கோவிந்தா கோவிந்தா தான். அவசர ஆத்திரத்திற்கு உடன் பிறந்தவர்களுக்கு கூட உதவ முடியாது என்ற அளவிற்கு ஆர்வம் விளையாட்டில் மட்டுமே இருக்கும்…
இந்த விளையாட்டின் பாதிப்பை அறிந்த குஜராத் அரசு, தற்போது அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. இந்த விளையாட்டிற்கு தடை விதித்தது. அதனையும் மீறி விளையாடிய 10 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, பின்னர் ஜாமீனில் வெளிவிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் இந்த ஆன்லைன் விளையாட்டு விளையாடுவதால் இன்றைய மாணவர்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதை உணர்ந்து அவரவர் திருந்திகொள்ள வேண்டும் என்பதை உணர்த்த சில பல நடவடிக்கையை எடுத்து வருகிறது குஜராத் அரசு. மேலும் இந்தியாவில் விரைவில் இந்த ஆன்லைன் விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கையை தற்போது மக்கள் முன்வைத்து உள்ளனர்.
courtesy: tamil.asianetnews