தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 10-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 43 ஆயிரத்து 51 சொட்டு மருந்து மையங்கள் நிறுவ அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ள தமிழக அரசு, புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும், இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், சோதனை சாவடிகள், விமானநிலையங்கள் ஆகியவற்றில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகானவர்கள் சொட்டு மருந்து முகாம்களில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளது. போலியோ சொட்டு மருந்து முகாம்கள் சிறப்பாக நடைபெறுவதால் கடந்த 15 வருடமாக போலியோ இல்லாத நிலையை தமிழகம் அடைந்துள்ளது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.