கோட்டக்குப்பத்தில் அடகு கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
கோட்டக்குப்பத்தை அடுத்த கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் ராமு (வயது 52). இவர் கடந்த 10 ஆண்டுகளாக கோட்டைமேடு சறுக்குப்பாலம் அருகே நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வழக்கம்போல் அடகுகடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
நேற்று காலை வழக்கம்போல் ராமு அடகு கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடைக்குள் சென்று பார்த்தபோது அடகு பிடித்த நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கரை உடைக்க முயற்சி நடந்திருப்பதையும் கண்டறிந்தார். அந்த லாக்கருக்குள்தான் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் வைக்கப்பட்டிருந்தன.
ராமு கடையை பூட்டிச் சென்றதும், நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் அடகு கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அவர்கள் அடகுபிடித்து வைக்கப்பட்டிருந்த நகைகள் இருந்த லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் லாக்கரை உடைக்க முடியாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். லாக்கரை உடைக்க முடியாததால் அதில் இருந்த நகைகள் கொள்ளை போகாமல் தப்பின.
இந்த கொள்ளை முயற்சி குறித்து, கோட்டக்குப்பம் போலீசில் ராமு புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடிக்க முயன்றவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.