தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 5 கோடியே 86 லட்சத்து 84 ஆயிரத்து 541 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 2,90,48,400, பெண்கள் 2,96,30,944. இதர பிரிவினர் 5,197 என மொத்தம் 5,86,84,541 பேர். மேலும், 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது முடிவடைந்தவர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்கவும், நீக்கவும், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளை செய்ய அக்டோபர் மாதம் இறுதி வரை (2 மாதங்கள்) வாய்ப்பு அளிக்கப்பட்டது. மொத்தம் 16,21,838 பேர் விண்ணப்பம் செய்தனர்.
விண்ணப்பம் செய்தவர்களின் வீடுகளுக்கு தேர்தல் அலுவலர்கள் நேரில் சென்று களஆய்வு செய்து, வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணிகள் நடந்து வந்தது. தற்போது இந்த பணிகள் முடிந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று கூறும்போது, “தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (31ம் தேதி) காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. அந்தந்த மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியும் வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள். சென்னையில், மாநகராட்சி ஆணையர் வெளியிடுவார்.தமிழகம் முழுவதும் மொத்தம் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர், புதிய வாக்காளர்கள் விவரம், நீக்கப்பட்ட வாக்காளர்கள் விவரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகர்களில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.