கோட்டகுப்பதில் நடைபெற்ற 70 வது இந்தியா குடியரசு தின விழா தொகுப்பு
இந்திய தேசத்தின் 70வது குடியரசு தினம் அஞ்சுமன் நூலக வளாகத்தில் மேனாள் பேரூராட்சி மன்றத் தலைவர் ஹாஜி இ. அப்துல் ஹமீது கொடியேற்றி வைக்க மதரஸா மாணவர் அணிவகுப்புடன் சிறப்பாக நடைபெற்றது. கடற்கரை ஒழுங்காற்று மண்டலம் குறித்து புதுவை பிரெஞ்சு நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருக்கும் திரு. அருண் குடியரசு தின உரையாற்றினார்.
அஞ்சுமன் நிர்வாகக் குழுவினர் கலந்து சிறப்பித்து குடியரசு தின வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடு அஞ்சுமன் செயலாளர் ஜனாப். லியாகத் அலி @ கலீமுல்லாஹ்.
அல்ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக்கல்லூரியில் குடியரசுதின விழா
கோட்டக்குப்பம் அல்ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக்கல்லூரியில் குடியரசுதினகொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது, தேசியகொடியை கல்லூரி செயலாளர். ஹாஜி முஹம்மது முஸ்தபா அவர்கள் ஏற்றி வைத்தார்கள், அந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் உஸ்தாதுகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்கள்.
KIWS சார்பில் குடியரசு தின விழா
கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கம் (KIWS), காவல்துறை நண்பர்கள்குழு மற்றும் ICDS பரகத் நகர் மைய ஊழியர்கள் இணைந்து 70ஆம் இந்திய குடியரசு தின விழா கோட்டக்குப்பம் பரகத் நகர் 3வது கிராஸில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட (ICDS) அங்கன்வாடி மைய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்திய தேசிய கொடியை கோட்டக்குப்பம் காவல்துறை ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள் ஏற்றி அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். மேலும் குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்துறை ஆய்வாளர் மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மரக்கன்றுகள் நட்டு செடி பாதுக்காப்பு கூண்டு அமைத்தார்கள்.
த.மு.மு.க. சார்பில் குடியரசு தின விழா
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நகர செயலாளர், நிஜாமுதீன். அவர்கள் தேசிய கோடி ஏற்றிவைத்தார்.
இந்தியா தேசிய காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற விழாவில் U. முஹம்மத் பாரூக் அவர்கள் தேசிய கோடி ஏற்றிவைத்தார்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.