கோட்டக்குப்பம் பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு 50 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
கோட்டக்குப்பம் பேரூராட்சி அதிகாரிகள் நடத்திய ஆய்வில் பல கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட 50 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சுற்றுச்சூழலை பாதுகாக்க தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டக்குப்பம் முதல் பெரியமுதலியார்சாவடி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் 300க்கும் மேற்பட்ட கடைகள், ஓட்டல்கள் இயங்கி வருகின்றன.
இக்கடைகளுக்கு தமிழக அரசு அறிவித்த பிளாஸ்டிக் தடை தொடர்பாக ஏற்கனவே கோட்டக்குப்பம் பேரூராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுத்து அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, பேரூராட்சி அதிகாரிகள் கோட்டக்குப்பத்தில் உள்ள கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, பல கடைகளில் விற்பனைக்காகவும், பயன்பாட்டிற்காகவும் தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆய்வில் 50 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தொடர்ந்து, ஆய்வு நடைபெறும் என்றும், இதையும் மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.