கோட்டகுப்பம் அடுத்த சோதனைகுப்பம் கடற்கரையில் 12 கிலோ எடையுள்ள மர்ம உருண்டை கரை ஒதுங்கியது.விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் அருகே உள்ள சோதனைகுப்பத்தை சேர்ந்தவர் தமிழ்மணி. மீனவரான இவர் நேற்று மதியம் 1.00 மணிக்கு அதே பகுதியில் உள்ள கடற்கரை ஓரம் நடந்து சென்றபோது, உருண்டை வடிவிலான பொருள் ஒன்று ஜொலித்துக்கொண்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார்.
உடன் இதுகுறித்து சோதனைகுப்பம் பஞ்சாயத்தார் மூலம் கோட்டகுப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் 12 கிலோ எடையுள்ள அந்த உருண்டை வடிவிலான பொருளை கைப்பற்றினர்.
இது குறித்து முன்னாள் கப்பற்படை அதிகாரி கூறுகையில்; கப்பல்களில் ஆக்சிஜன் அல்லது சமையல் காஸ் நிரப்பி வைக்க பயன்படுத்தும் சிலிண்டர் என்றார்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.